டி20 உலககோப்பையில் இந்திய அணிக்கு இவரே ஒப்பனராக விளையாட வேண்டும் – பாக் வீரர் ஆதரவு

IND

ஆண்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியில், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மாவுடன் ப்ரித்வி ஷாவை களமிறக்குவதை காட்டிலும் மற்றொரு முன்னனி வீரரைத்தான் இந்திய அணி ஓப்பனராக களமிறக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சல்மான் பட் கருத்துக் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவருடைய சொந்த யூ டியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர்,

இந்தியாவில் அதிக திறமை வாய்ந்த வீரர்கள் இருப்பதால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வது, அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தலைவலியாகவே இருக்கும். ஏனெனில் பல இளம் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் தங்களுடைய திறமையை நிரூபித்து, இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புக்காக காத்திருக்கிறனர். ஆனால் இந்திய அணியானது எப்போதுமே நிலையான ஆட்டத்தையும், சூழ்நிலையை மனதில் வைத்து பொறுப்பான ஆட்டத்தையும் வழங்கும் வீரர்களை மட்டுமே அணிக்குள் சேர்க்கும் என்பதால், எதிர்வரும் டி20 உலக கோப்பையில் கே எல் ராகுலையே இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யும்.

- Advertisement -

கே எல் ராகுல் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் என்பதையும் தாண்டி அவரால் விக்கெட் கீப்பிங்கும் செய்ய முடியும் என்பதால், அணியின் சமநிலைத் தன்மையை சீராக வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்திய அணியால் இன்னொரு பௌலரையோ அல்லது பேட்ஸ்மேனையோ அணிக்குள் தாராளமாக கொண்டு வரலாம் என்பதால் விராட் கோலி கே எல் ராகுலையே தேர்த்தெடுப்பார் என்று நான் கருதுகிறேன் என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோவில் ப்ரித்வி ஷாவைப் பற்றியும் கூறிய அவர்,

rahul 2

ப்ரித்வி ஷா ஒரு திறைமையான ஆட்டக்காரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் நிலையான ஆட்டத்தை வழங்க தவறுகிறார். நிறைய கடினமான ஷாட்களை ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஆடுவதால், அவரது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்து விடுகிறார். அணி எந்த நிலமையில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளாமல் அவர் என்ன நினைக்கிறாரோ அதேபோல் விளையாடிவிட்டு செல்வதால் தான் அவரால் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவில்லை. எனவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கே எல் ராகுல்தான் இந்திய அணியில் ஓப்பனிங் விளையாட சரியான நபராக இருப்பார் என்று அவர் அந்த வீடியோவில் தெரவித்திருக்கிறார்.

- Advertisement -

Rahul

கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின்போது ஓப்பனிங் ஆடிய கே எல் ராகுல், சரியாக விளையாடாத காரணத்தினால் விராட் கோலியே, ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஓப்பனிங் ஆடினார். ஆனால் அதற்குப் பிறகு நடந்த ஒரு நாள் தொடரில் அற்புதமாக ஆடிய கே எல் ராகுல் மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வந்ததோடு மட்டுமல்லாமல், ஐபிஎல் தொடரிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 ஆட்டங்களில் மீணடும் தனது திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement