இந்திய அணியில் இவர் இல்லாமல் இங்கிலாந்தை ஜெயிக்கவே முடியாது – சல்மான் பட் கருத்து

Butt

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்விக்கு பிறகு அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே அடைந்த தோல்வியால் துவண்டு இருக்கும் இந்திய அணி நிச்சயம் இந்த இங்கிலாந்து தொடரில் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை எதிர்கொள்ளும். அதுமட்டுமின்றி தனிப்பட்ட முறையில் விராட் கோலியும் அதிக அளவில் பாதிக்கப்படுவார் என்று தெரிகிறது.

இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் வேளையில் எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பிடிப்பார்கள் என்பது இதுவரை உறுதியாகவில்லை. ஆனாலும் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியில் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டிய முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும். அவருக்கான அழைப்பு கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நிச்சயம் புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் இடம் பெற்று இருக்க வேண்டும்.

Bhuvi

ஏனெனில் இந்திய அணியில் இருக்கும் பவுலர்களில் பந்தினை சிறப்பாக ஸ்விங் செய்யும் திறமை அவரிடம் உள்ளது. இங்கிலாந்து போன்ற மைதானங்களில் வேகத்திற்கும், ஸ்விங்கிற்க்கும் அதிக அளவு சாதகம் உள்ளதால் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு சிறப்பாக அமையும். எனவே நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய நிர்வாகம் அவரை அழைக்க வேண்டும் என்பதே எனது கருத்து என சல்மான் பட் கூறியுள்ளார்.

- Advertisement -

Bhuvi

சமீப காலமாகவே இந்திய அணி குறித்தும் இந்திய வீரர்கள் குறித்தும் நல்ல வகையில் பேட்டி அளித்து வரும் சல்மான் பட் இம்முறை புவனேஸ்வர் குமாரை அணியில் இணைக்க வேண்டும் என்று கூறிய இந்தக் கருத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது மட்டுமின்றி ரசிகர்களின் ஆவலாகவும் இதுவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement