இங்கிலாந்து தொடரில் மட்டும் இவர் ஆடுனா அவ்ளோதான். ரொம்ப கஷ்டப்படுவாரு – சல்மான் பட் பளீர் பேட்டி

Butt
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த 3 வீரர்கள் தற்போது காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். இதனால் இலங்கை தொடர் முடிந்ததும் ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து பயணிக்க உள்ளனர்.

INDvsENG 1

ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி தற்போது துவண்டுள்ளது. அதனை ஈடுகட்டும் வகையில் இங்கிலாந்தில் அவர்களை வீழ்த்தும் எண்ணத்துடனும் இந்திய அணி தற்போது அடுத்து பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் இங்கிலாந்து தொடரில் தடுமாற போகும் இந்திய வீரர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Shaw-1

அதன்படி இளம் வீரரான ப்ரித்வி ஷா நிச்சயம் இங்கிலாந்து மைதானங்களில் பேட்டிங்கில் தடுமாறுவார் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ப்ரித்வி ஷாவின் கால் நகர்வுகள் காரணமாக அவர் இங்கிலாந்து மைதானத்தில் விளையாடினால் நிச்சயம் அவர் பேட்டிங் செய்ய ரொம்பவே கஷ்டப்படுவார்.

Shaw

ஆனாலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் அணியில் உள்ளதால் அவருக்கு போதுமான ஆலோசனை வழங்கி நல்ல ஆட்டத்தை வெளிக்கொணர முடியும். இருப்பினும் அயல்நாட்டு மைதானத்தில் இளம் வீரரான அவருக்கு இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு சோதனையாக அமையும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement