விராட் கோலியின் 71 ஆவது சதம் எப்போது ? சரியான விளக்கத்துடன் பதிலளித்த – சல்மான் பட்

Butt
- Advertisement -

தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் யாராலும் அசைத்து பார்க்ககூட முடியாத அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி. 2009 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்த அவர், அதற்குப் பிறகு வந்த ஆண்டுகளில் தொடர்ச்சியான சதங்களை அடித்து, இன்றைய கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்லாமல், முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் ஆச்சரியப்படுத்தினார். சர்வதேச போட்டிகளில் இதுவரை 100 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமை படைத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க, தற்போதுள்ள கிரக்கெட் வீரர்களில் விராட் கோலிக்கு மட்டுமே அதிகமான வாய்ப்புகள் உள்ளது. விராட் கோஹ்லி ஒரு போட்டியில் அரைசதம் அடித்துவிட்டால் அதனை அப்படியே சதமாக மாற்றிவிடுவார். அந்த இயல்பு அவருக்கு இயற்கையிலேயே அமைந்துள்ளது என்று அவரின் சதமடிக்கும் திறமையை, இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதே மகேந்திர சிங் தோணி பாராட்டியிருக்கிறார்.

kohli

- Advertisement -

இப்படி ஆண்டுதோறும் சதங்களாக குவித்து வந்த விராட் கோலி, தற்போது ஒன்றரை வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். ஒவ்வொரு போட்டியின் போதும் விராட் கோலி சதமடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்திய கிரக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்த ஏமாற்றமே காலப்போக்கில், விராட் கோஹ்லியின் மீது விமர்ச்சனமாக எழுந்துவிட்டது என்பதே உண்மை. தற்போது விராட் கோஹ்லியின் மீது எழுந்துள்ள இந்த விமர்ச்சனத்திற்கு பதிலடி தந்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சல்மான் பட். யூடியூப் வீடியோ ஒன்றில் அவர் விராட் கோஹ்லியை பற்றி பேசியதாவது,

விராட் கோஹ்லி பல சாதனைகளை தகர்த்து எரிந்துள்ளார். அவர் தற்போது இருக்கும் வயதில் உலகில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் 70 சதங்களை அடித்தது கிடையாது. அவர் தற்போது முழு உடல் தகுதியுடனும், முழு ஃபார்மிலும் உள்ளார். இலக்கை சேஸ் செய்யும்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 90ஆகவும், ஆவரேஜ் 50க்கும் மேல் உள்ளது. இனிமேல் யாரால் அவரை தடுத்து நிறுத்த முடியும்? கோஹ்லியால் அடுத்த போட்டியிலேயே அல்லது அடுத்த தொடரிலேயே சதமடிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவில் மேலும் பேசிய அவர்,

Kohli-1

விராட் கோஹ்லி சதமடிக்கவில்லை என்றால், அவர் ரன்களே அடிக்கவில்லையென்று நினைத்து விடுகிறார்கள். அவர் கடந்த ஒரு வருடமாக சதமடிக்கமால் இருக்கலாம், ஆனால் அவரடித்த ரன்களைப் பார்த்தால், நிச்சயமாக அவர் சிறந்த சராசரியுடன் தான் விளையாடி இருக்கிறார். அவரால் கண்டிப்பாக சதமடிக்க முடியும். அதற்கான நேரம்தான் இன்னும் அவருக்கு அமையவில்லை என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

Kohli-3

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 70 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, கடைசியாக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருக்கிறார். அதற்குப் பிறகு ஒன்றரை வருடங்கள் ஆகியும், சர்வதேச போட்டிகளில் அவர் சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement