இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததிலிருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது. மேலும் இந்திய அணியில் சிறப்பாக விளையாடாத வீரர்கள் மேலும் அழுத்தங்கள் தற்போது அதிகரிக்கத்து வருகிறது. இதனால் அடுத்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் வீரர்கள் மீது விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆனா சல்மான் பட் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா மீது தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். 2013ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமான ரோகித் சர்மா கடந்து 2019 ஆம் ஆண்டிலிருந்துதான் ஓப்பனாக விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் ரோகித் டெஸ்ட் போட்டிகளிலும் ஓரளவு சிறப்பான துவக்கத்தை தந்திருந்தார்.
ஆனால் சமீபகாலமாக அவரது ஆட்டம் மோசமாக இருந்து வருவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த அவர் கூறுகையில் : ரோகித் சர்மா கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடி வருகிறார். இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பான துவக்கத்தை தந்த அவர் அதற்குமேல் ரன் சேர்க்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கடினமான மைதானங்களிலும் பொறுமையாக விளையாடி ரன் சேர்க்கும் அவர் 30 ரன்களை கடந்தது ஆட்டமிழந்து விடுகிறார் இதுதான் அவர் மீது இருக்கும் விமர்சனம் இதை அவர் சரிசெய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவரை போன்ற ஒரு பெரிய வீரர் 30 ரன்களை கடந்து ஆட்டம் இழப்பது தவறான ஒரு செயலாகும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் நிச்சயம் தனது தவறுகளை சரிசெய்து விடுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றும் ரோகித் சர்மா பழைய பார்முக்கு மீண்டும் திரும்புவார் என்று தான் நம்புவதாக சல்மான் பட் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.