இந்தியாவிற்கு அடுத்த சூப்பர் பாஸ்ட் பவுலர் ரெடி. அவரோட டேலன்ட் மாஸ் – புகழ்ந்து தள்ளிய பாக் வீரர்

Butt
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கி நடைபெற்றது. மழை காரணமாக ஐந்தாவது நாளில் போட்டி டிராவில் முடிந்தாலும் இந்த போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது. ஐந்தாவது நாளில் கிட்டத்தட்ட இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மழை காரணமாக போட்டி நடைபெறாமல் போனதால் இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பித்தது என்றே கூறலாம்.

rain

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். இதனால் இந்திய அணிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களை ஆட்டமிழக்க வைத்தனர். ஒரு பக்கம் அனுபவ வீரர்களான பும்ரா, ஷமி சிறப்பாக செயல்பட்டாலும் அதே வகையில் இளம் வீரர்களான ஷர்துல் தாகூர் மற்றும் சிராஜ் ஆகியோரும் தங்களது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாராட்டி பேசி உள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் அது குறித்து கூறுகையில் : முகமத் சிராஜ் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அனுபவமற்ற வீரராக இருக்கலாம். ஆனால் அவர் உள்ளூர் போட்டிகளிலும், இந்திய ஏ அணிக்காகவும் நிறைய விளையாடியுள்ளார்.

Siraj-1

அதனால் அவருடைய பந்து வீசும் விதம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புது பவுலர் போன்று தெரியவில்லை அவர் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். மேலும் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் என்ன லைனில் பந்து வீச வேண்டும் ? என்பது அவருக்கு நன்றாகத் தெரிகிறது. அவருடைய வேகம் மற்றும் இளமை ஆகியவை அவரது பந்துவீச்சுக்கு மிகவும் உதவுகிறது. சரியான வேகத்தில் பவுன்சர்கள் வீசுகிறார் அதுமட்டுமில்லாமல் நல்ல வலிமையுடன் உள்ளதால் சீரான வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி வருகிறார்.

siraj

என்னை பொருத்தவரை இந்திய அணிக்கு அடுத்த தரமான பவுலராக இவர் மாறுவதற்கு பெரிய வாய்ப்பு உள்ளது. அதே போன்று இந்திய அணியும் பயணிக்கும் வெளிநாடுகளில் எல்லாம் வெற்றிபெற துவங்கியுள்ளது என சல்மான் பட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement