இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரமின் கலவை – சல்மான் பட் புகழாரம்

Butt
- Advertisement -

பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான சல்மான் பட் சமீபத்தில் தொடர்ச்சியாக இந்திய அணி குறித்தும், இந்திய அணியின் வீரர்கள் குறித்தும் ஆதரவாக பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விராட்கோலிக்கு எதிராக அளித்திருந்த பேட்டிக்கு பதிலடி தரும் விதமாக அவர் மைக்கேல் வாகனை எதிர்த்து கோலிக்கு சப்போர்ட் செய்து பேசியிருந்தார்.

Salman-butt

இப்படி தொடர்ச்சியாக இந்திய அணி வீரர்கள் குறித்து ஆதரவாகப் பேசி வரும் சல்மான் பட் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை ஏகபோகமாக புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : பும்ரா ஒரு சாதாரண வீரர் கிடையாது. அவர் இந்தியாவுக்கு கிடைத்த மிகவும் ஸ்பெஷலான வீரர்.

- Advertisement -

அவரின் திறமையை வீணடிக்காமல் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். மிக மிக முக்கியமான போட்டிகளில் அவரது பங்கு அவசியமானதாக இருக்கும். முக்கிய தருணங்களில் ஏற்கனவே பும்ரா தன்னை நிரூபித்திருக்கிறார். அவர் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் என்று சல்மான் பட் கூறினார்.

Bumrah

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஒவ்வொரு கேப்டனுக்கும் பும்ரா மிகவும் முக்கியமானவர். ரோகித் சர்மா அவரை புரிந்து சரியான விதத்தில் பயன்படுத்தி வருகிறார். ஐபிஎல் தொடர்களின் போது முதலில் 2 ஓவர்கள் கொடுத்து விட்டு இறுதியில் அவரை மீண்டும் பந்துவீச அழைக்கிறார். அது ஒரு நல்ல அணுகுமுறை ஏனென்றால் இறுதி ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசுவது மட்டுமின்றி ரன் கொடுக்காமல் விக்கெட்டையும் கைப்பற்றுகிறார் என்று கூறியுள்ளார்.

Bumrah

மேலும் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரர்களுடனும் பும்ராவை ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் எவ்வளவு முக்கியமான வீரர்களாக இருந்தார்களோ அவர்களை போன்று தற்போது இந்திய அணிக்காக பும்ரா இருக்கிறார். அனைத்து வகையான பந்துவீசும் திறமையும் அவரிடம் இருக்கிறது என சல்மான் பட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement