கோலிக்கு அடுத்து இந்திய அணிக்கு கேப்டனாக இவங்க 3 ரெடியா இருக்காங்க – சல்மான் பட் குறிப்பிட்ட அந்த 3 பேர் யார் தெரியுமா ?

Butt-1

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் விராட் கோலி கேப்டனாக திகழ்ந்து வருகிறார். தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட் அணியையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இருப்பினும் அவரால் ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்று ஒரு சிறிய வருத்தம் மட்டுமே உள்ளது. அதை தவிர்த்து மற்றபடி கேப்டனாக தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

Kohli

இந்நிலையில் இன்னும் சில ஆண்டுகள் கழித்து விராட் கோலிக்கு பதிலாக யாரை அடுத்த கேப்டனாக தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. இந்நிலையில் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இது குறித்து அவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்திய அணியை வழிநடத்த 3 வீரர்களுக்கு தகுதி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : எனக்கு இந்திய அளவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பற்றி அவ்வளவு தெரியாது. ஆனால் ஐபிஎல் தொடரை பற்றி தெரியும் அதன் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது கோலிக்கு அடுத்து ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம் என்பதே எனது கருத்து.

Pant

ஏனெனில் அவர் இளம் வீரர். அவரால் இந்திய அணிக்கு பல ஆண்டுகாலம் சிறப்பாக கேப்டனாக செயல்பட முடியும். இந்த ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் 8 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்று முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வெற்றி பெற்றுக்கொடுத்த ரோகித் சர்மாவை அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Rahane

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார் அதே போன்று சர்வதேச அளவிலும் அவர் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை கோலிக்கு அடுத்த கேப்டனாக செயல்பட ரஹானேவுக்கு நல்ல வாய்ப்பும் தகுதியும் அவரிடம் உள்ளது என மூன்று வீரர்களை குறிப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement