குல்தீப் யாதவ் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடனுனா இதுதான் ஒரே வழி – சல்மான் பட் யோசனை

Butt

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இளம் வயதிலேயே தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார். மூன்று வகையான இந்திய அணியிலும் ரிஸ்ட் ஸ்பின்னரான அவர் முதன்மை வீரராக விளையாடி வந்தார். குல்தீப் யாதவ் 2017-18 ஆம் ஆண்டுகளில் தவிர்க்கமுடியாத பந்துவீச்சாளராக இடம்பெற்று விளையாடி வந்தார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிலிருந்து குல்தீப் யாதவ்க்கு சரிவு ஏற்பட துவங்கியது.

kuldeep 1

அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பலத்த அடி வாங்கிய குல்தீப் யாதவ் அதற்கடுத்து சர்வதேச போட்டிகளிலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாமல் திணறினார். தோனி இருக்கும் வரை ஓரளவு சுதாரித்து விளையாடிய அவருக்கு அவ்வப்போது வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால் தோனி ஓய்வு பெற்றபின் இந்திய அணியில் இருந்து முழுவதுமாக குல்தீப் யாதவ் நிராகரிக்கப்பட்டார்.

- Advertisement -

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூட டோனி இல்லாதது தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து செல்ல உள்ள இந்திய அணியிலும் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த வருடம் நடைபெற்ற ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம் பெற்று இருந்தாலும் ஒரு போட்டியில் கூட அவரை அணி நிர்வாகம் விளையாட வைக்கவில்லை.

kuldeep

இதனால் மனதளவில் வருத்தத்துடன் உள்ள குல்தீப் யாதவ் மீண்டும் தனது சிறப்பான பார்முக்கு திரும்ப பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தனது யோசனையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : குல்தீப் யாதவ்க்கு தற்போது தன்னம்பிக்கை குறைந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவரது திறனை சரியாக வைத்து இருப்பார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் நிராகரிக்கப்பட்டு உள்ளதால் அவருடைய தன்னம்பிக்கையின் அளவு தற்போது குறைந்துள்ளது.

- Advertisement -

Kuldeep-1

எனவே அவர் மீண்டும் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடவேண்டும். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி லாங்கர் பார்மட்டில் இழந்த தனது பார்மை மீட்டு எடுத்தால் அவருக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும் .அதே நம்பிக்கையுடன் அவர் திரும்பவும் இந்திய அணியில் இடம் பிடிக்கும் போது அவர் சிறப்பாக விளையாடவும் அந்த நம்பிக்கை அவருக்கு கைகொடுக்கும் என சல்மான் பட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement