அவர் ரொம்ப ஒல்லியா இருக்காரு. கொஞ்சம் வெயிட் ஏத்தியே ஆகனும் – சல்மான் பட் அட்வைஸ்

Butt

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரரான சல்மான் பட் அண்மையில் இந்திய அணி குறித்தும், இந்திய அணி வீரர்கள் குறித்தும் தொடர்ச்சியான தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது கருத்துக்கள் இந்திய ரசிகர்கள் பெருமளவு வரவேற்பினை பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா குறித்தும் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Butt

இதுகுறித்து அவர் பேசுகையில் : ஹார்டிக் பாண்டியா மீது இந்திய அணி அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறது. ஆனால் கடந்த பல மாதங்களாக அவர் விடுப்பில் இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் அவர் பேட்டிங் செய்யும்போது மிகவும் திறமையானவராக தெரிகின்றார். ஆனால் காயம் அடைவதற்கு முன்பு அவரது பவுலிங்கும் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் பாண்டியா பவுலிங்கில் சற்று சொதப்பி வருகிறார். மீண்டும் அவர் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் எனில் அவர் நிச்சயம் அவரது உடல் எடையை கூட்ட வேண்டும். ஒல்லியாக இருப்பதால் தான் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

pandya 1

மேலும் இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர் : பாண்டியா திறமைசாலி என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அற்புதமான பேட்டிங் திறமை, அழகான பௌலிங் ஆக்சன் என அனைத்துமே அவரிடம் அருமையாக இருக்கின்றன. ஆனால் அவரால் அதிக உடல் அழுத்தத்தைத் தாங்க முடிவதில்லை.

- Advertisement -

இதனால் சற்று உடல் எடையைக் கூட்ட வேண்டும். அப்படி அவருடைய உடல் எடை அதிகரித்தால் நிச்சயம் அவரால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று சல்மான் பட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement