- Advertisement -
ஆசிய கோப்பை

நல்ல துவக்கம் கிடைத்தும் நாங்க பைனல்ல தோக்க இதுவே காரணம் – பாகிஸ்தான் கேப்டன் வருத்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை மீண்டும் ஒருமுறை வீழ்த்தி 17-வது ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்திய அணி பெற்ற இந்து வெற்றிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்திய அணியிடம் நாங்க தோக்க இதுவே காரணம் : சல்மான் ஆகா

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே அடித்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ஃபர்கான் 57 ரன்களையும், பக்கர் சமான் 46 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக திலக் வர்மா 69 ரன்களையும், ஷிவம் துபே 33 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா கூறுகையில் : உண்மையிலேயே இந்த தோல்வியை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியின் ஆரம்பத்தில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங்கை துவங்கியிருந்தோம். அதேபோன்று பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாகவே துவங்கி இருந்தோம். ஆனாலும் நாங்களே எங்களது வெற்றியை பறிகொடுத்ததாக நினைக்கிறேன். ஏனெனில் முதல் பாதியின் போது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட நாங்கள் அதனை சரியாக முடிக்க தவற விட்டோம். இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே நாங்கள் நினைத்த அளவு ரன்களை குவிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க : பாக் பவுலர்ஸ் யார் வந்தாலும் நொறுக்குவதே திட்டம்.. இதுக்கு அவங்க சப்போர்ட் பண்ணாங்க.. தொடர்நாயகன் அபிஷேக்

அதேபோன்று பந்து வீச்சிலும் முதல் பாதியில் சிறப்பாக பந்து வீசிய நாங்கள் ஒரு கட்டத்தில் 6 ஓவர் 63 ரன்கள் தேவை என்கிற நிலையில் போட்டி எங்களிடமே இருக்கிறது என்று நினைத்தோம். ஆனால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்களது வெற்றியை பறித்து விட்டனர் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -