
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை மீண்டும் தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெறும் என்பது இங்குள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆனால் இந்தியாவுக்கு எதிராக துண்டுஒரு தடவை மட்டுமே தவறும் என்ற வகையில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார். அதாவது லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக தாங்கள் நிறைய தவறுகளை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதனாலேயே இந்தியாவுக்கு எதிராக நடப்பு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இறுதிப்போட்டியில் இந்தியாவை விட தாங்கள் குறைவான தவறுகளை செய்து கோப்பையை வெல்வோம் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். இது பற்றி சல்மான் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் மோதும் போது எப்போதுமே நிறைய அழுத்தம் இருக்கும். எனவே அந்தப் போட்டியில் அழுத்தம் இல்லை என்று சொன்னால் அது தவறானது”
“இரு அணிகளுக்குமே சமமான அளவு அழுத்தம் இருக்கும். அவர்களைக் (இந்தியா) காட்டிலும் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அதனாலேயே கடந்த 2 போட்டிகளில் நாங்கள் வெற்றி பெறவில்லை. ஒருவேளை அவர்களைக் காட்டிலும் நாங்கள் குறைந்து தவறுகளைச் செய்தால் கண்டிப்பாக எங்களால் வெற்றி பெற முடியும். குறைந்த தவறுகளை செய்யும் அணியே வெற்றி பெறும்”
“அந்த வகையில் நாங்கள் குறைந்த தவறுகளை செய்ய முயற்சிப்போம். அல்லாஹ்வின் கருணையால் நாங்கள் நாளை வெற்றி பெறுவதை நீங்கள் பார்ப்பீர்கள். சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதே எங்களுடைய முயற்சி. ஒருவேளை நாங்கள் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடி 40 ஓவர்களும் திட்டங்களை செயல்படுத்தினால் எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும்”
இதையும் படிங்க: பாக் வீரர்கள் மேலே தவறில்லை.. பாகிஸ்தான் ரசிகர்களுக்கு தான் இந்தியா மேல் இந்த பொறாமை.. கபில் தேவ்
“அதைத் தான் நாங்கள் செய்ய முயற்சிக்க உள்ளோம்” என்று கூறினார். இந்தியாவை தோற்கடிப்போம் என்று இப்படி ஆரம்பம் முதலே பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் செயலில் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது.