இந்திய கிரிக்கெட்டின் தலைமை செயலகம் என்று கருதப்படும் சர்வதேச இந்திய கிரிக்கெட் சங்கம் (பி சி சி ஐ ), சமீபத்தில் உள்ளூர் ஆட்ட நடுவர்களுக்கு 100 சதவித ஊதிய உயர்வை அளித்திருந்தது . இந்த 100 சதவீத ஊதிய உயர்வு, கிரிக்கெட் போட்டியில் இருக்கும் வீடியோ ஆய்வாளர், ஸ்கோரர் ஆகியோர்களுக்கும் பொருந்தும் என்றும் பி சி சி ஐ அறிவித்துள்ளது.
இந்த சம்பள உயர்வின்படி முதல் ரக கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் டாப் 20 நடுவர்கள் ஒரு போட்டிக்கு 40000 ரூபாய் சம்பளமும், இதர நடுவர்கள் 30000 ருபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள். டி 20 போட்டிகளை எடுத்துக் கொண்டால் இதுவரை நடுவர்கள் ஒரு போட்டிக்கு 20000 ரூபாய் சம்பளம் பெற்றனர், தற்போது அது 40000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது .மற்ற போட்டிகளுக்கு இதுவரை 15000 ரூபாயாய் இருந்த நடுவர்களின் சம்பளம் இரட்டிப்பாகி 30000 ரூபாயாகஉயர்ந்துள்ளது.
நடுவர்களின் இந்த புதிய சம்பள உயர்வு பரிசீளிக்க உச்ச நீதி மன்றம், நிர்வாக கமிட்டி ஒன்றை நிர்னையித்தது. பின்னர் அவர்கள் ஒப்புதல் வழங்கிய பின் இந்த புதிய ஊதிய திட்டம் அமல்படுத்தபட்டது. இது குறித்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கையில் ‘பி சி சி ஐ-யின் பொது மேலாளர் கரீம், நடுவர்கள் தான் உள்ளூர் கிரிக்கெட்டின் முதுகெலும்பு என்று எண்ணியதாகவும் , எனவே அவர்களின் முயற்சிகளுக்கு மதிபலித்தே இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பி சி சி ஐ நடுவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பி சி பி-யும் அந்நாட்டு நடுவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது. இதுவரை நடுவர்களுக்கு ஒரு போட்டிக்கு 6000 ரூபாய் சம்பளம் வழங்கி வந்தது. அந்நாட்டின் முதல் ரக நடுவருக்கு கூட 5500 ரூபாய் சம்பளம் தான் வழங்கப்பட்டு வந்தது. இதனால் தற்போது பி சி பி யும் தங்கள் நாட்டு நடுவர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளது.