ஐபிஎல் ஏலம் : வீரர்களுக்கான சம்பளம் எப்படி வழங்கப்படும் தெரியுமா? – தெளிவான விவரம் இதோ

ipl trophy
- Advertisement -

மற்ற அனைத்து வருடங்களைப் போலவே ஐபிஎல் 2022 சீசனுக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற போதிலும் இந்த ஏலத்தின் இறுதியில் 204 வீரர்கள் மட்டுமே 551 கோடி ரூபாய்கள் செலவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த வருடமும் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை வாங்குவதற்கு அனைத்து அணிகளிடமும் கடும் போட்டி நிலவியது.

hugh

- Advertisement -

இறுதியில் இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

வீரர்களின் சம்பளம்:
அத்துடன் தீபக் சஹர், லியாம் லிவிங்ஸ்டன், நிக்கோலஸ் பூரான், ஷார்துல் தாகூர் போன்ற பல நட்சத்திர வீரர்கள் 10 கோடிகளுக்கு மேல் ஒப்பந்தமாகி அசத்தினார்கள். இன்னும் சொல்ல வேண்டுமானால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 11 வீரர்கள் 10 கோடிக்கும் மேல் சம்பளமாக பெற்றுள்ளார்கள்.

Ishan

பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தில் 50% க்கும் மேற்பட்ட வீரர்கள் கோடிகளில் வாங்க படுவார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இளம் வீரர்கள் கூட குறைந்தபட்சம் 20 லட்சம் விலையில் வாங்குவார்கள். இப்படி லட்சம் முதல் கோடிகள் வரை ஒப்பந்தமாகும் கிரிக்கெட் வீரர்களுக்கு எப்படி சம்பளம் வழங்கப்படும், அதற்கு வரி உள்ளதா என்பது போன்ற முழுவிவரங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

1. ஏல ஒப்பந்தத்தின்படி வாங்கப்படும் வீரர்களுக்கு அந்த சம்பளத் தொகை வழங்கப்படும் என்றாலும் அதற்கான வரித்தொகை என்பது தொகைக்கு ஏற்ப பிடிக்கப்படும்.

ipl

2. அதேபோல ஒப்பந்தத்தில் எடுக்கப்படும் வீரருக்கு வழங்கப்படும் சம்பளம் அவருக்கு மட்டுமே சேரும். அதை அவர் சார்பில் வேறு யாரும் உரிமை கோர முடியாது.

- Advertisement -

3. வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையானது இந்திய ரூபாயில் வழங்கப்படும். முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2012 வரை நடந்த ஏலத்தில் வீரர்களுக்கான சம்பளம் அமெரிக்க டாலர் மதிப்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ipl-2021-ind

4. அதேபோல் சம்பளங்கள் அனைத்தும் அந்த சீஸனுக்கு உண்டானது மட்டுமேயாகும். எடுத்துக்காட்டாக ஒரு வீரர் 5 கோடிக்கு வாங்கப்பட்டால் ஒரு சீசனில் விளையாடுவதற்கு அவருக்கு 5 கோடிகள் வழங்க வேண்டும். ஒருவேளை அவர் 3 சீசன்கள் விளையாடினால் அவருக்கு 15 கோடிகள் சம்பளமாக வழங்க வேண்டும்.

- Advertisement -

5. ஒரு வீரர் 3 சீசனுக்கு ஒப்பந்தம் செய்யப்படும் போது அவருக்கு முதல் சீசனில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகை எஞ்சிய 2 சீசனுக்கும் வழங்கப்படும். இருப்பினும் ஒருவேளை அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு அதிக சம்பளம் வழங்க அணி நிர்வாகம் விரும்பினால் அதற்காக புதிய ஒப்பந்தத்தை உருவாக்கி அதன் வாயிலாக சம்பளத்தை உயர்த்தி வழங்கலாம்.

ipl-2020

6. மேலும் ஒரு வீரர் ஒரு சீசனில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டால் அவர் களத்தில் இறங்கி விளையாடினாலும் விளையாடா விட்டாலும் அவருக்கு ஒப்பந்தப்படி சம்பளம் வழங்க வேண்டும்.

7. ஒருவேளை ஒரு ஐபிஎல் சீசன் துவங்குவதற்கு முன்பாக ஒரு வீரர் காயத்தால் விலகும் நிலை ஏற்பட்டால் அவருக்கு அந்த அணி நிர்வாகம் சம்பளம் வழங்க வேண்டிய அவசியமில்லை.

Ipl-batsman

8. அதேபோல் ஒரு சீசன் துவங்குவதற்கு முன்பாக ஒரு வீரர் விலக விரும்பினால் அதை அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். அந்த வகையில் அவரை விடுவிக்க அந்த அணி நிர்வாகம் நினைத்தால் அவருக்கு சம்பளத்தை கொடுக்க வேண்டும்.

9. ஒரு வீரர் அந்த சீசனில் காயத்தால் விலகும் நிலை ஏற்படும் பட்சத்தில் அவருக்குத் தேவையான மருத்துவ செலவுகளை அவரின் சம்பளத் தொகையில் இருந்து அணி நிர்வாகம் பிடித்துக் கொள்ளலாம்.

IPL

10. அத்துடன் ஏலத்தில் வாங்கப்படும் வீரர்களுக்கான சம்பளம் ஒரே தொகையாக கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதாவது ஒரு அணி நிர்வாகம் தனது விருப்பத்திற்கு ஏற்ப தன்னிடமுள்ள பணத்திற்கு ஏற்ப சம்பள தொகையை பகுதி பகுதிகளாக பிரித்தும் வழங்கலாம் அல்லது ஒரே தொகையாக கூட வழங்கலாம். ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன் 50% நடந்த பின் 50% அல்லது 15%-65%-20% என பல்வேறு வகைகளில் பிரித்து வழங்கலாம்.

Advertisement