ராகுல் ட்ராவிட்டை விட இந்த பயிற்சியாளருக்கு சம்பளம் அதிகமாம்.! எத்தனை கோடி தெரியுமா..!

coachers
- Advertisement -

ராகுல் டிராவிட் இந்திய ஏ அணியின் பயிற்சியாளாக இருந்து வருகிறார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் யு19 அணியின் பயிற்சயாளராகவும் இருந்து வருகிறார். இவரை போன்றே கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணி வீரரான ரவி சாஸ்திரி இருந்து வருகிறார்.

rahul-dravid

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் அணைத்து பயிற்சியாளருக்கும் சம்பள உயர்வை அறிவித்திருந்தது பி சி சி ஐ. ஆனால், இந்த சம்பள உயர்வு எந்த மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் என்று பி சி சி ஐ தெரிவிக்காமல் இருந்தது. இதனால் பயிற்சியாளர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் அளிக்கப்படாமல் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் கிடப்பில் இருந்த சம்பள பாக்கி தொகையை பயிற்சியாளர்களுக்கு அளித்ததது பி சி சி ஐ. இதில் இந்திய ஏ அணி மற்றும் யு 19 அணிகளின் பயிற்சியாளராக இருக்கும் ட்ராவிட்டிற்கு மார்ச் மாத சம்பளமாக 40 லச்சத்து 50 ஆயிரம் ருபாயை பி சி சி ஐ அளித்துள்ளது.

RaviOutPut

அதே போன்று இந்திய சர்வதேச அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ரவிசாஸ்திரிக்கு கிடப்பில் கிடந்த 3 மாத சம்பள பாக்கியை அளித்துள்ளது. அவருக்கு 3 மாத சம்பளமாக 1 கோடி 90 லட்ச ரூபாயை வழங்கியுள்ளது. அதாவது ஒரு மாத சம்பளமாக 63 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் அதிக சம்பளம் பெரும் பயிற்சியாளர்களில் ரவி சாஸ்திரி என்பது குறிப்படத்தக்கது.

Advertisement