நல்லவேளை நான் நீண்ட முடியுடன் தோனியை பாக்கல. பாத்து இருந்தேன் இதான் நடந்திருக்கும் – சாக்ஷி தோனி ஓபன் டாக்

Sakshi

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கிறார் மேலும்., ஐபிஎல் தொடரும் இல்லாததால் கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொள்வதில்லை. இந்நிலையில் அவரது மனைவி சாக்ஷி நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நேரலையில் பேட்டி கொடுத்தார்.

அப்போது பல கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார் தோனியின் ஓய்வு பற்றி சமீபத்தில் வந்த வதந்திகள் பற்றியும் பேசினார். இது வெறும் வதந்தி தான் லாக்டவுன் காலத்தில் உங்களது மனநிலை பிரண்டு விட்டது என்பது போன்றும் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் தோனி சும்மா இருக்கும் நேரங்களில் வீட்டில் என்ன செய்கிறார் என்பது பற்றியும் பேசியுள்ளார் சாக்ஷி சிங்.

அதில் அவர் கூறியதாவது : தோனி இந்த லாக் டவுன் காலத்தில் சுமார் 7 பைக்குகளை வடிவமைத்தார். அந்த ஏழு பைக்குகளும் பழைய மாடல் பைக்குகள் ஆகும். அதற்கான உதிரிபாகங்களை கடையிலிருந்து வாங்கி வந்து ஒரு முழு பைக்கை தயார் செய்தார் . ஆனால் ஒரு சில பாகங்களை சரியாக பொருத்த தவறிவிட்டார்.

இதன் காரணமாக அந்த பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. உடனடியாக அனைத்தையும் பிரித்து போட்டுவிட்டார். அவர் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அதிகமாக கேம் விளையாடுகிறார். இது அவரது மனதை திசை திருப்புகிறது. குறிப்பாக எப்போதும் பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கிறார். தூக்கத்தில் கூட பப்ஜி குறித்து புலம்பிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் சாக்ஷி டோனி.

- Advertisement -

மேலும் தோனியின் ஆரம்பலகால ஹேர்ஸ்டைல் குறித்தும் இந்த நேரலையில் பகிர்ந்து கொண்டார். அதில் சாக்ஷி பகிர்ந்து கொண்டவையாவது : ஒருவேளை நான் தோனியை நீண்ட முடியுடன் அந்த ஆரஞ்சு நிற கலருடன் பார்த்திருந்தால் நான் அவரை கண்டுகொள்ளாமல் சென்றிருப்பேன். அதுபோன்ற ஹேர்ஸ்டைல் அவருக்கு செட் ஆகாது. பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாமுக்கு பொருத்தமாக இருக்கும்.

ஆனால் தோனிக்கு அது நன்றாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை. நல்லவேளை நான் தோனியை அந்த ஹேர்ஸ்டைலுடன் பார்க்கவில்லை. ஒட்ட வெட்டிய முடியுடனே அவரை சந்தித்தேன். அதற்காக கடவுளுக்கு நன்றி என்று சாக்ஷி தெரிவித்தார். ஆனால் தோனியின் அந்த நீளமான ஹேர்ஸ்டைல் இந்திய ரசிகர்கள் பலரை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.