தோனிக்காக புதிய காரை வாங்கி பரிசளிக்க காத்திருக்கும் அவரது மனைவி – காரின் விலை மற்றும் புகைப்படம் இதோ

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வருகிறார். அவருடைய பயிற்சி காலம் ஆகஸ்ட் 15ம் தேதி லே பகுதியில் கொடியேற்றத்துடன் முடிவடைகிறது.

- Advertisement -

இந்நிலையில் அவரது மனைவி தோனிக்காக விலை உயர்ந்த புதிய கார் ஒன்றினை வாங்கி அவரது வீட்டில் நிறுத்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தோனியின் மனைவி குறிப்பிட்டதாவது : வெல்கம் ரெட் பீஸ்ட், தோனி உங்களின் புதிய விளையாட்டு பொருளாக இந்த கார் ஒரு வழியாக நம் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டது.

மகி உங்களை பெரிதும் மிஸ் செய்கிறேன். இந்த கார் இந்தியாவின் சிட்டிசன்ஷிப்க்காக காத்திருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 90 லட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கார் கிராண்ட் செரோக்கே வகை கார் என்பதும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement