தோனிக்கு எல்லாமே கிரிக்கெட் தான் ஆனா எனக்கு எல்லாமே அவருதான் – பிறந்தநாள் அன்று நெகிழ்ந்த சாக்சி தோனி

Sakshi

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக 17 வருடங்கள் ஒரு வீரராகவும், 15 வருடங்கள் கேப்டனாகவும் பல சாதனைகள் படைத்து இருக்கிறார். அவருக்கு 2010 ஆம் ஆண்டு தனது தோழி சாக்ஷி சிங்குடன் திருமணம் ஆனது. இருவருக்கும் ஐந்து வயதில் ஜிவா என்ற மகள் இருக்கிறார்.

தோனிக்கு 39 வயதாகிறது. அவரது மனைவி சாக்ஷி சிங் நேற்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் தோனி அவருடைய மனைவி சாக்ஷி, அவருடைய மகள் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் இருந்தனர். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சாக்ஷி, மேலும் பிறந்தநாள் கொண்டாடிய கையோடு அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

அந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவில்… எப்போதுமே அமைதியானவர் ஆக இருக்கும் தோனியின் மனநிலையை சோகமானதாக என்னால் மாற்ற முடியும். ஏனெனில் அவருக்கு நெருக்கமான ஒருவராக இருக்கிறேன்.

sakshi

நாங்கள் வீட்டில் கிரிக்கெட் பற்றி பேசவே மாட்டோம். நானும் அதுபற்றி அவரிடம் கேட்டுக் கொள்ள மாட்டேன். எனது மகளுக்கும் அவர் சொல்வதுதான் பெரும் சொல் அதில் மாற்றுக்கருத்து இருக்காது சொல்வதை அப்படியே செய்து விடுவார் ஜிவா. தோனி வைத்திருந்த நீண்ட முடி எனக்கு பிடிக்காது. அதே நேரத்தில் டோனி தான் எனக்கு முக்கியம் அவருக்கு கிரிக்கெட் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார் சாக்சி.

- Advertisement -

Sakshi

கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தோனி மற்றும் சாக்ஷி தம்பதியினருக்கு 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வேளையில் குழந்தை பிறந்தது . இதனால் அந்த தொடர் முடிந்த பின்னரே தனது மகளை தோனி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement