இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணியின் ஒரு லக்கி நட்சத்திரம் என்றே கூறலாம். தோனிக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் ஆதரவாக இருந்து வருவது அவருடைய மனைவி சாக்ஷி தான். சமீபத்தில் தோனி தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதால் துப்பாக்கி உரிமம் கோரியுள்ளார்.
சாக்ஷி மாலிக், கடந்த 2010 ஆம் தோனியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிறந்த கொழந்தை தான் ஜிவா. சாக்ஷி நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியின் மூலம் பெரும் பிரபலமடிந்தார். தோனி தலைமை ஏற்று விளையாடிய சென்னை அணியை தொடர் முழுக்க உற்சாகபடுத்தி வந்தார்.
ஐபிஎல் தொடரின் போது சாக்ஷி மற்றும் ஜிவா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். சமூக வலைத்தளங்களில் தோனியின் மகள் ஜிவாவின் பல விடியோக்கள் கூட வெளியாகி இருந்தன.இந்நிலையில் தான் அடிக்கடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வெளியில் சென்றுவிடுவதால் தனது குடுமத்திற்கு பாதுகாப்பு இல்லை என்று எண்ணியுள்ளார் தோனி.
இதனால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உணரும் தோனியின் மனைவி சாக்ஷி, சுய பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் கோரி ராஞ்சி மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளார். . ஆனால், இன்னும் ஷாக்ஷிக்கு துப்பாக்கி உரிமம் கிடைக்கவில்லை.ஆனால், தோனி ஏற்கனவே துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது