லாஃக்டவுனில் எல்லாம் பைத்தியமா ஆயிட்டீங்களா. தோனி பற்றிய ஹேஷ்டேக்கால் கடுப்பான சாக்ஷி தோனி – விவரம் இதோ

Sakshi
- Advertisement -

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. துவக்கத்தில் சில மாதங்கள் அவரே ஓய்வு கேட்டாலும் அதன் பின்னர் நடைபெற்ற தொடர்களில் தோனியை இந்திய நிர்வாகம் கழற்றி விட்டது என்றே கூறலாம். மேலும் சமீபத்தில் வெளியான பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் நீக்கப்பட்டது.

Dhoni

- Advertisement -

இதன் காரணமாக தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தோனியும் இதுவரை தனது ஓய்வு முடிவை குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஐபிஎல் தொடரில் தான் சிறப்பாக விளையாடி உலக கோப்பை டி20 தொடரில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்திருந்தார்.

ஆனால் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அந்த கனவும் தற்போது தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனால் தோனி நிச்சயம் இனி இந்திய அணிக்கு திரும்புவது மிகக் கடினம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று நீண்ட நாட்களாக பேச்சும் எழுந்து வந்தது.

இந்நிலையில் தற்போது நேற்று திடீரெனெ தோனி ஓய்வு குறித்து ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் ட்ரென்டிங் டோபிக்காக மாறியுள்ளது. நேற்று திடீரென #DhoniRetires என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் அதிகளவு ட்ரென்டிங் ஆகியது. இதனை கண்ட தோனியின் மனைவி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மூலம் இந்த பொய்யான தகவல் எதிரான தனது கருத்தினை கோபமாக பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து சாக்ஷி பதிவிட்ட ட்விட்டர் பதிவில் : “இது வெறும் வதந்தி தான். லாக்டவுன் காலத்தில் மக்களின் மனநிலை நிலையில்லாததாக மாறியுள்ளதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த பதிவை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே சாக்ஸி அதனை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

Sakshi

இருப்பினும் அந்த பதிவு குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தோனிக்கு பிடிக்காத சிலர் இதுபோன்ற செயல்களையும், தங்களது கருத்துக்களை கூறிவந்தாலும் தோனி தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement