ஹார்டிக் பாண்டியாவை ராஞ்சி வீட்டுக்கு அழைத்த தோனியின் மனைவி – விவரம் இதோ

Sakshi

இந்திய அணியின் முன்னணி வீரரான ஹார்டிக் பாண்டியா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு இந்தியா திரும்பிய பாண்டியா ஓய்வில் இருக்கிறார்.

View this post on Instagram

Miss this little one (and the big guy too) ❤

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

இந்நிலையில் பாண்டியா நேற்று தோனி மற்றும் ஜிவா தோனி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நான் இந்த சிறுமியையும் இந்த பெரியவரையும் மிஸ் செய்கிறேன் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். பாண்டியாவின் இந்த பதிவு அவர் பதிவிட்ட சிலமணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி பதிவிற்கு தற்போது கமெண்ட் ஒன்றை அளித்துள்ளார். அதில் தோனியின் மனைவி குறிப்பிட்டதாவது : உங்களுக்கு ராஞ்சியில் ஒரு வீடு இருப்பது தெரியும் தானே சரியா ? என்று கமெண்ட் செய்துள்ளார். அவரது இந்த கமெண்டில் உள்ள அர்த்தம் யாதெனில் நீங்கள் டோனி மற்றும் ஜீவாவை மிகவும் பிரிந்திருப்பது போன்று உணர்ந்தால் நேரடியாக வீட்டுக்கே வந்து பார்க்கலாம் என்பதே அதன் அர்த்தம். தோனி மனைவியின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.