2020 ஆம் ஆண்டை வரவேற்று தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தோனியின் மனைவி – வைரலாகும் புகைப்படம்

Sakshi

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த சில தொடர்களாகவே அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் எப்போது மீண்டும் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

View this post on Instagram

2020 with this man ❤️ !

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி எனது ஓய்வு முடிவு குறித்தும் எனது கிரிக்கெட் குறித்தும் ஜனவரி மாதம் வரை எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று தெரிவித்திருந்தார். பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலியும் தோனியின் ஓய்வு குறித்த முடிவு அவரே தீர்மானிப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி தோனி தங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வெளியான சிலமணி நேரத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுமின்றி அதிக அளவு லைக்ஸ் மற்றும் ஷேர் செய்யப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.