தோனியின் மனைவி சாக்ஷிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே இப்படி ஒரு உறவுமுறையா ? – சுவாரசிய தகவல் இதோ

wife
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய இரண்டு பெயர்களாக தற்போது ரசிகர்கள் மத்தியில் வலம் வருவது முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் பெயரும், தற்போதைய கேப்டன் விராட் கோலியின் பெயரும் தான். இந்திய கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத இடத்தில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் இவர்கள் இருவரது கரியரும் இந்திய கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தது என்றால் அது மிகையாகாது. தோனி கோலி ஆகியோர் ஒன்றாக விளையாடும் போது களத்தில் அவர்களுக்கு இடையே இருந்த புரிதலை நாம் கண்டுள்ளோம்.

Dhoni

- Advertisement -

அதனை தாண்டி தற்போது யாரும் அறியாத தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் அது உறவுமுறையை குறித்து இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். தோனி தனது மனைவியான சாக்ஷியை காதல் திருமணம் செய்து கொண்டதும், விராட் கோலி தனது மனைவியான அனுஷ்கா சர்மாவை காதல் கொண்டு திருமணம் செய்ததும் நாம் அறிந்தவையே. ஆனால் இதைத்தாண்டி சாக்ஷி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் சிறு வயதில் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அது தொடர்பான சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அனுஷ்கா சர்மா வின் தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால் அவ்வப்போது இந்தியா முழுவதும் அவருக்கு பணியிடை மாற்றம் செய்யப்படும். அப்படி ஒருமுறை அசாமில் அனுஷ்கா சர்மா அவர்களது குடும்பம் தங்க வேண்டி இருந்தது. அப்போது அனுஷ்கா சர்மா சென்ற அதே செயின்ட் மேரிஸ் பள்ளியில்தான் தோனி மனைவியான சாக்ஷியும் படித்துள்ளார்.

இதனை 2013ஆம் ஆண்டு நடந்த ஒரு இன்டர்வியூவில் அனுஷ்கா சர்மாவே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நானும் சாக்ஷியும் அசாமில் ஒரு சிறிய நகரத்தில் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தோம் என்று அவர் கூறியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் அனுஷ்கா சர்மா சினிமா பக்கமும், சாக்ஸி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு என தங்களது கேரியரை நோக்கி பயணித்துள்ளனர்.

sakshi

அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு சாக்ஷி தோனியையும், 2017 ஆம் ஆண்டு அனுஷ்கா சர்மா விராத் கோலியையும் திருமணம் செய்து கொண்டனர். தோனி சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்கின்ற பெண் குழந்தையும், கோலி அனுஷ்கா தம்பதிக்கு வாமிகா என்ற பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தோனி கோலியை தாண்டி தற்போது அனுஷ்கா சர்மாவும் மற்றும் சாக்ஷி ஆகியோர் சிறு வயதில் இருந்தே பிரண்ட்ஸ் என்பது தற்போது இந்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement