மீண்டும் மிடில் ஸ்டம்பை பிளக்கும் சரியான யார்க்கர் பந்தை வீசிய சைனி – வைரலாகும் வீடியோ

Saini

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பவுலிங்கில் அசத்தினார்கள்.

இந்த போட்டியில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களில் பந்துவீச்சு அசத்தலாக இருந்தது. தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், சைனி 3 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் எடுத்து அசத்தினார். மேலும் இந்திய அணியின் இந்த வேகப்பந்துவீச்சு தாக்குதலில் இலங்கை அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர்.

மேத்யூஸ் மற்றும் தனஞ்செயா தவிர மற்ற எவரும் 10 ரன்கள் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் குசல் பெரேராவுக்கு எதிராக சைனி வீசிய யார்க்கர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ஆறாவது ஓவரின் முதல் பந்தை வீசிய சைனி தனது துல்லியமாக யார்கரின் மூலம் குசால் பெரேராவை க்ளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.