என் கையில் இருக்கும் ஓநாய் டாட்டூக்கு பின் இருக்கும் ரகசியம் இதுதான் – சைனி விளக்கம்

Saini
- Advertisement -

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இளம் வேகப்பந்து வீச்சாளர் சைனி 4 ஓவர்கள் வீசி 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் அவர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு சைனி தனது கையிலுள்ள டேட்டு பற்றி புவனேஷ்வர் குமாருக்கு ஒரு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : முதல் போட்டி என்பதால் சற்று அழுத்தமாக உணர்ந்தேன். இருந்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தினேன் என்று நினைக்கவில்லை. இருப்பினும் பொல்லார்ட் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் கையிலிருக்கும் ஓநாய் டாட்டூ குறித்து அவர் கூறியதாவது : என் அண்ணன் சிறுவயது முதலே ஓநாய் படங்களை அதிகம் ரசித்துப் பார்ப்பார் அவரின் தூண்டுதலால் நானும் ஓநாய் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். அதனால் தான் இந்த ஓநாய் டாட்டூவை போட்டேன் அதே போன்று எந்த ஓநாயும் எந்த சர்க்கஸிலும் சாகசம் செய்யாதவை தனித்துவம் கொண்டவை என்றார்.

Advertisement