- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணி தோற்றாலும் இவரது ஆட்டத்தை பாராட்டிதான் ஆகவேண்டும் – விவரம் இதோ – INDvsNZ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் குப்தில் 79 ரன்களும், டைலர் 73 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி சிறப்பாக பேட்டிங் செய்து 49 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் அடங்கும். கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நினைத்த போட்டியில் 153 ரன்கள் இருந்தபொழுது களமிறங்கிய நவ்தீப் சைனி ஜடேஜாவுடன் சேர்ந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து அசத்தினார்.

கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் வந்து ஆட்டம் இருந்து வெளியேறிய சைனி அனைவரது வரவேற்பையும் பெற்றார். குறிப்பாக அவர் சிக்சர் அடிக்கும் பொழுது கேப்டன் கோலி டக்அவுட்டில் இருந்து தனது மகிழ்ச்சியை அவரது ஆரவாரம் காண்பித்தார். ஜடேஜாவும் இவரும் கடுமையான போராட்டத்தை தந்தனர். எளிதாக வெற்றி பெறும் என்று நியூசிலாந்து எதிர்பார்த்த நிலையில் சைனியின் இந்த அதிரடி ஆட்டம் அவர்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by