மே.இ தொடரில் இந்த இளம் வேகப்புயல் அணியில் இருப்பார். அவரின் சேவை அணிக்கு தேவை – விவரம் இதோ

team-india
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

Iyer-2

- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த தொடரில் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், பும்ரா, ஷமி மற்றும் உமேஷ் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் தற்போது மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் அணியில் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரரான நவதீப் சைனி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். கடந்த ஐபிஎல் தொடரிலும், இந்திய ஏ அணிக்காகவும் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிவரும் சைனி டி20 போட்டியிலும் சிறப்பாக பந்துவீசினார்.

Saini-1

அதனால் அவரை இந்த தொடரின் டெஸ்ட் தொடரின் பேக்கப் பந்துவீச்சாளராக இந்திய அணி தேர்வு செய்துள்ளது. தீடிரென்று வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அல்லது வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்படும் பட்சத்தில் இந்திய அணிக்காக சைனி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement