147.5 கி.மீ வேகத்தில் சரியாக மிடில் ஸ்டம்பை பதம்பார்த்த சைனியின் அசுர யார்க்கர் – வைரல் வீடியோ

Saini

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை குவிக்க அதன்பின்னர் இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் அசத்தலாக பந்துவீசிய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி 4 ஓவர்கள் வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்நிலையில் இவர் இலங்கை அணியின் துவக்க வீரராக குணத்திலகாவுக்கு வீசிய ஒரு யார்க்கர் பந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி 147.5 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த அந்த பந்து சரியாக மிடில் ஸ்டெம்பை பதம் பார்த்தது. இதனைக் கண்ட கேப்டன் கோலியும் தனது மகிழ்ச்சியை அவரை நோக்கி வெளிப்படுத்தி கொண்டாடினார். மேலும் சைனியின் இந்த யார்க்கர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி முழுவதும் சைனியன் வேகமும் மற்றும் பவுன்சும் ரசிகர்கள் வியக்கும்படி ஆகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.