இஷாந்த் ஷர்மாவிற்கு பதிலாக இந்திய அணியில் இணைய இருக்கும் வீரர் இவர்தானாம் – விவரம் இதோ

Ishanth-2
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற நிலையில் கைப்பற்றி அசத்தியது. அதன் பின்னர் தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட துவக்க வீரர் ஷிகர் தவான் மும்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் காயம் ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில் மேலும் ஒருவீரராக தற்போது இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய இஷாந்த் சர்மா பந்துவீச்சின் போது கணுக்கால் பகுதியில் காயம் அடைந்தார்.

Saini

அவரது காயம் மோசமாக இருப்பதால் அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் டெஸ்ட் அணியில் அவர் இடம்பிடிப்பது சந்தேகமாகி உள்ளது. அப்படி இஷாந்த் சர்மா டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை என்றால் அவருக்கு பதிலாக சமீபத்தில் இந்திய அணியில் இடம்பெற்று அசத்தி வரும் இளம் வீரரான சைனி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.

Advertisement