அறிமுக போட்டியிலேயே மோசமான நிலையை சந்தித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் – இப்படியா நடக்கனும்?

Sai Sudharsan
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூன் 20-ஆம் தேதியான இன்று லீட்ஸ் மைதானத்தில் துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் தமிழக இளம் வீரரான சாய் சுதர்சனுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற சிறிய நிகழ்ச்சியில் இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா சாய் சுதர்சனுக்கு அறிமுக தொப்பியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

முதல் வாய்ப்பிலேயே ஏமாற்றம் தந்த சாய் சுதர்சன் :

அதோடு இந்திய அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் சாய் சுதர்சனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 317-வது வீரராக இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு பெற்ற சாய் சுதர்சன் இந்த முதல் போட்டியிலேயே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 700-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்த அவர் சிறப்பான ஃபார்மில் இருந்தார். அதன் காரணமாக அவரது ஆட்டம் இந்த முதல் இன்னிங்சிலேயே அற்புதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் இந்த போட்டியில் 4 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சாய் சுதர்சன் இப்படி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்றாவது இடத்தில் களமிறங்க அபிமன்யு ஈஸ்வரனை தேர்வு செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வரும் வேளையில் அவரை தாண்டி சாய் சுதர்சனுக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் அவர் தனது தேர்வை நியாயப்படுத்தாமல் வெளியேறியுள்ளது மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கவாஸ்கர் – ஸ்ரீகாந்தின் 29 வருட சாதனையை முறியடித்த கே.எல் ராகுல் ஜெய்ஸ்வால் ஜோடி – விவரம் இதோ

இந்த போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு எல்லாம் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி தேநீர் இடைவேளை வரை மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் 215 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement