இந்திய டி20 அணியில் விராட் கோலியின் 3 ஆம் இடத்திற்கு சாய் சுதர்சன் சரியாக பொருந்துவார் – 3 காரணங்கள் இதோ

Sai
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான சாய் சுதர்சன் டொமஸ்டிக் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். அவரது சிறப்பான செயல்பாடுகள் காரணமாக ஏற்கனவே இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் கடந்த ஆண்டு அறிமுகமான அவர் 3 போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதங்களுடன் 63 ரன்கள் சராசரியுடன் 127 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதோடு ஐபிஎல் தொடரில் 2022-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் சாய் சுதர்சன் இதுவரை 25 போட்டிகளில் விளையாடி 1034 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

இப்படி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் சாய் சுதர்சன் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதால் அவரது மூன்றாவது இடத்தில் விளையாட சரியான தேர்வாக இருப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் அந்த அளவிற்கு மிகப் பிரமாதமாக இருந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது இடத்திற்கு சாய் சுதர்சன் மிகச் சரியான வீரராக பொருந்துவார் என்பது குறித்த மூன்று முக்கிய காரணங்களை இங்கு காணலாம். அந்த வகையில் முதலில் அவர் ஒரு நல்ல பக்குவம் உள்ள வீரர். அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே தனது திறன்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டு வரும் சாய் சுதர்சன் பேட்டிங் டெக்னிக் குறித்து பயிற்சியாளர்களிடமும், சீனியர் வீரர்களிடமும், ஆலோசகர்களிடமும் நிறைய விடயங்களை கேட்டு கற்றுக் கொள்பவராக இருக்கிறார். அதோடு வெளிநாடுகளிலும் சென்று அதனை பயின்று வருகிறார்.

இரண்டாவது காரணம் : ஐபிஎல் தொடரில் 2022-ஆம் ஆண்டு அறிமுகமானாலும் 25 போட்டியிலேயே 1000 ரன்களை தொட்டு நம்பர் மூன்றாவது இடத்தை குஜராத் அணியில் இறுக்கமாக பற்றி கொண்டுள்ளார். கேன் வில்லியம்சன் போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருந்தும் குஜராத் அணி நம்பி அவரை மூன்றாவது இடத்தில் களமிறக்கி வரும் வேளையில் அவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

- Advertisement -

குறிப்பாக நிலையாக நின்று விளையாட வேண்டிய இடத்தில் நிலையாக ஆங்கர் ரோலையும் அடித்து விளையாட வேண்டிய இடத்தில் அட்டாக் செய்தும் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அவரது புள்ளி விவரங்களே அவரது சிறப்பை உணர்த்தும். மூன்றாவது காரணம் : வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிற்கும் எதிராகவும் அவர் சிறப்பான டெக்னிக்கை வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : தோனியின் தேர்வு தான் சரி.. சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தான் கேப்டன்சி பொருந்தும் – ஏன் தெரியுமா?

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்கூப் போன்ற வித்தியாசமான ஷாட்கள் சிலவற்றையும் அவரால் விளையாட முடிகிறது. அதேபோன்று ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் முதல் அனைத்து வகையான ஷாட்களையும் அவரால் விளையாட முடிகிறது. இப்படி அனைத்து திறன்களையும் கொண்ட சாய் சுதர்சன் நீண்ட இன்னிங்ஸ் விளையாடக்கூடிய திறனை வைத்துள்ளார். எனவே விராட் கோலி இடத்தில் அவரை விளையாட வைக்கலாம் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement