எனக்கு பதிலா இவர் ஆடறதால எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல – சஹா ஓபன் டாக்

Saha
- Advertisement -

தோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார் விருத்திமான் சஹா. கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டியில் இவர் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கிறார். சமீபத்தில் ரிஷப் பன்ட் திடீரென இங்கிலாந்தில் சில சத்ங்களை விளாசியதால் அவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மாற்ற இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது.

Saha-3

- Advertisement -

இவ்வாறு வெளிநாட்டு ஆடுகளங்களில் எல்லாம் ரிஷப் பண்ட் ஒரு பேட்ஸ்மேனாகவும் ,விக்கெட் கீப்பராக இருப்பார். அதே நேரத்தில் இந்திய ஆடுகள்னகளில் சுழற்பந்து வீச்சில் பந்து அதிகமாக திரும்பும் என்பதால் விருத்திமான் சஹா கீப்பராக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் தான் 2 டெஸ்டிலும் கீப்பராக இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் ஆடவில்லை. இதனால் விருத்திமான் சஹாவையே வெளிநாடுகளிலும் கீப்பராக களமிறக்கி இருக்கலாம் இருக்கலாம் என முன்னாள் வீரர்கள் பேசி வருகின்றனர்.

Saha

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேசியுள்ள விருத்திமான் சஹா : இந்தியாவில் மட்டும்தான் நான் விக்கெட் கீப்பராக இருப்பேன். வெளிநாடுகளில் ரிஷப் பன்ட்தான் கீப்பராக இருப்பார் என்பது போல் எனக்கு எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு தனிப்பட்ட வீரரை விட அணியின் முன்னேற்றம் தான் முக்கியம்.

- Advertisement -

அணி வெற்றி பெற்றால் எனக்குப் போதுமானது. ரிஷப் பன்ட்டை ஆட வைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார் விருத்திமான் சஹா.

saha 2

மேலும் தற்போது பெங்கால் அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடிய சஹா தனது சிறப்பான ஆட்டத்தினால் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளார். மேலும் தான் பேட்டிங்கில் குறைவானவர் இல்லை என்றும் நிரூபித்துள்ளார். இதனையடடுத்து இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் சஹாவே கீப்பர் சாய்ஸ்சுக்கு முதலில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement