டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நான் டீம்ல இருந்தாலும் எனக்கு சேன்ஸ் கிடைக்குறது கஷ்டம் தான் – புலம்பிய சீனியர் வீரர்

Saha-3

இந்தியாவில் நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஜூன் 18-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

INDvsNZ

ஐசிசி முதன்முறையாக நடத்தும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் 20 வீரர்கள் மற்றும் நான்கு பேக்கப் வீரர்கள் என 24 பேர் கொண்ட பெரிய குழு இங்கிலாந்து செல்ல உள்ளது. இந்த அணியில் சஹா, ரிஷப் பண்ட், ராகுல் மற்றும் பரத் ஆகிய 4 விக்கெட் கீப்பர்கள் அடங்கியுள்ளனர்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஓய்வு பெற்ற பிறகு அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக சஹா விளையாடி வந்தார். இருப்பினும் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் சஹாவிற்கு பதிலாக அவருக்கு சமீபத்தில் தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்தி வரும் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடர், இங்கிலாந்து தொடர் என தான் விளையாடிய அடுத்தடுத்த தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிரந்தர இடத்தையும் பிடித்து கொண்டார்.

saha 2

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இவரே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தன்னுடைய இடம் குறித்து பேசியுள்ள சஹா கூறுகையில் : உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிகட்ட போட்டிகளில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

Saha

ஆஸ்திரேலிய பயணத்தின் போதும், இங்கிலாந்து பயணத்தின் போதும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் அவர்தான் முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக இருப்பார். நான் எனக்கான வாய்ப்புக்காக காத்திருப்பேன் ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நான் சிறப்பாக செயல்படுவேன் என்றும் சகா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சஹா சிறப்பான விக்கெட் கீப்பராக இருந்தாலும் பண்ட் பேட்டிங்கில் மேட்ச் வின்னராக இருப்பதால் அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

Advertisement