நான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க இவரே காரணம். தோனி இருந்து இருந்தால் எனது நிலைமை இதுதான் – சஹா ஓபன் டாக்

Saha
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு கீப்பர்கள் இல்லாத காலத்தில் சரியான திறமையுடன் வந்து சேர்ந்தவர் தோனி .2004 ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை மூன்று விதமான போட்டிகளிலும் இவர்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தார். டெஸ்ட், டி20, ஒரு நாள் என அனைத்து போட்டிகளிலும் தனக்கான இடத்தை பிடித்து எடுத்துக் கொண்டார் தோனி.

Dhoni

- Advertisement -

இவரை திறமையின் காரணமாக தினேஷ் கார்த்திக், விருத்திமான் சஹா, பர்த்திவ் படேல் என பல இந்திய திறமை வாய்ந்த விக்கெட் கீப்பர்களுக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் போனது. இந்நிலையில் இது குறித்து இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் விருத்திமான் சஹா பேசி உள்ளார். அவர் கூறுகையில் :

நான் டோனியின் இடத்தை நிரப்ப வரவில்லை. எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவ்வளவுதான். நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான போது விவிஎஸ் லட்சுமணனுக்கு காயமடைந்தது. அப்போது நானும் ரோகித் சர்மாவும் பயிற்சியின்போது தெரியாத்தனமாக மோதிக்கொண்டோம். இதன் காரணமாக ரோகித் சர்மா காயமடைந்தார் இப்படித்தான் நான் முதன்முதலில் அறிமுகமானேன்.

saha 2

டோனி அன்றைய போட்டியின்போது டாஸ் போட்டுவிட்டு வந்து, ‘இன்று நீ விளையாடுகிறாய்’ என்று கூறினார். என்னால் அந்த தருணத்தை நம்பவே முடியவில்லை. பயிற்சியாளர்கள் நான் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தனர். தோனிதான் அப்போது எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் தொடர்ந்து டெஸ்ட் அணியில் இருந்து இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது.

Saha-3

அதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்று விட எனக்கு டெஸ்ட் அணியில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. தோனியிடம் இருந்து பலவற்றை கற்றுள்ளேன். கீப்பராக, பேட்ஸ்மேனாக, அவரது கீப்பிங் திறமை என பலவற்றை அவரிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் விருத்திமான் சஹா.

Advertisement