இந்த இங்கிலாந்து தொடரோடு முடிவுக்கு வர உள்ள இந்திய சீனியர் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை – மூட்டையை கட்ட வேண்டியதுதான்

IND
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் என மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான 25 பேர் கொண்ட இந்திய அணி ஜூன் மாதம் இரண்டாம் தேதி இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு புறப்பட தயாராகி உள்ளது. மேலும் நான்கு மாதங்கள் நடைபெறும் இந்த தொடரானது மிகப்பெரிய தொடர் என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரோடு இந்திய அணியில் இருந்து சீனியர் வீரர் ஒருவர் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு விடுவார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் சரி, இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து டெஸ்ட் போட்டியிலும் சரி முதன்மை விக்கெட் கீப்பராக நிச்சயம் ரிஷப் பண்ட் தான் விளையாடுவார் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

ஏனெனில் இளம் வீரரான ரிஷப் பண்ட் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான பார்மில் இருப்பதுடன், மேட்ச் வின்னராகவும் திகழ்ந்து வருவதால் அவரே தொடர்ச்சியாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக அணியில் உள்ள சீனியர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான விருதிமான் சஹா இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

saha

கிட்டத்தட்ட இந்த இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் சஹாவிற்கு 37 வயது ஆகிவிடும் இதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பு கிடைப்பது கடினம். தற்போது 36 வயதான சஹா 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது டெஸ்ட் பயணத்தை துவங்கினார். இதுவரை 38 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 1251 ரன்களை குவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு அணியில் அறிமுகமானாலும் தோனியின் இடம் காரணமாக அவருக்கு 2015ஆம் ஆண்டில் இருந்து தான் தொடர்ந்து இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

Saha

2014 ஆம் ஆண்டு தோனியின் ஓய்வுக்கு பிறகு உலகின் தலைசிறந்த கீப்பர் சஹா தான் என்றும் கூறி சில பேட்டிகளில் கூறியிருந்தார். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அடிக்கடி காயத்தினால் சிக்கிய சகா அணியில் விளையாட போது ரிஷப் பண்ட் அவரது இடத்தில் தேர்வாகி சிறப்பாக விளையாடி வருவதால் அவர் தற்போது நிரந்தர விக்கெட் கீப்பராக மாறிவிட்டார். இதன் காரணமாக நிச்சயம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement