சி.எஸ்.கே வீரர்களிடம் இருந்து தான் எனக்கு கொரோனா பரவியிருக்கும் – புது குண்டை தூக்கிப்போட்ட வீரர்

CSKvsSRH
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது முதற்கட்ட போட்டிகள் வெற்றிகரமாக முடிவுற்ற நிலையில் இரண்டாவது கட்டப் போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெற்றன. 29 போட்டிகள் முடிந்த நிலையில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக அந்த போட்டி நிறுத்தப்பட்டது.

sandeep

- Advertisement -

அதன் பின்னர் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பாலாஜி மற்றும் அணி நிர்வாகத் தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோருக்கே கொரோனா பரவியது. பின்னர் அதனை தொடர்ந்து விருத்திமான் சஹா, டிம் சைபர்ட் என அடுத்தடுத்து வீரர்களுக்கு இடையே வைரஸ் பரவியதால் இந்த தொடரானது பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்த விருத்திமான் சாஹா தனக்கு எவ்வாறு கொரோனா பரவியிருக்கும் இருக்கும் என்பது குறித்து ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் : நாங்கள் ஏர்போர்ட்டுக்கு சென்று டெல்லிக்கு சென்றோம். அதன் பின்னர் சிஎஸ்கே எதிரான போட்டிக்கு முன்பு எனக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. ஆனால் சிஎஸ்கே அணி போட்டி முடிந்து அந்த வீரர்களுடன் சிறிது நேரம் பழகினேன். எனவே அவர்களில் யாராவது ஒருவரிடம் இருந்து தான் எனக்கு கொரோனா பரவியிருக்க வேண்டும்.

Saha

ஏனெனில் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் சிலருக்கு அறிகுறிகள் இருந்திருக்கின்றன. அதனால் நிச்சயம் எனக்கு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்புதான் எனக்கு கொரோனா பரவியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சஹா கூறியுள்ளார்.

Saha 2

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் நடைபெற்றபோது மற்ற அணி வீரர்களுடன் தொடர்பு ஏற்பட வில்லை. அதனால் பயோ பபுள் சரியாக இருந்தது. இம்முறை சில இடங்களில் ஏற்பட்ட தவறு காரணமாகவே வீரர்களிடையே தொற்று பரவியிருக்கலாம் என சஹா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement