மீண்டும் கொரோனா உறுதியான இந்திய வீரர். அணியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு – சீனியர் வீரரின் பரிதாபநிலை

Saha-3
- Advertisement -

ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களுக்கு மத்தியிலும் கொரானா தொற்று பரவியதால், இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்களின் பட்டியிலை கடந்த வாரம் வெளியிட்டது பிசிசிஐ. அந்த பட்டியலில் ஐபிஎல் தொடரின்போது கொரானவால் பாதிக்கப்பட்ட ஒரு வீரரின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வீரருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு மீண்டும் கொரானா தொற்று உறுதியானதால், அவர் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த ஐபிஎல் தொடரின் பாதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரரான வருண் சக்கரவர்த்திக்கு தான் முதலில் கொரானா தொற்று கண்டறியப்பட்டது. அவரைத் தொடர்ந்து அந்த அணியின் மற்றொரு வீரரான சந்தீப் வாரியரும் கொரானாவால் பாதிக்கப்பட்டார். இந்த இருவருக்கும் பாதிப்பு ஏற்பட்ட அடுத்த நாளே டெல்லி அணியில் அமித் மிஸ்ராவுக்கும், ஐதராபாத் அணியில் விருத்திமான் சாஹாவிற்கும் கொரனா தொற்று ஏற்பட்டதால், வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரை தள்ளி வைத்தது பிசிசிஐ.

இதில் விருத்திமான் சாஹா, தற்போது அறிவித்துள்ள இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடித்திருக்கிறார். இந்த மாதம் 4ஆம் தேதி அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது பத்து நாட்கள் முடிவடைந்த நிலையில் அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்பரிசோதனையில் அவருக்கு கொரானா இன்னும் குணமாகவில்லையென்று தெரியவந்திருப்பதால், அவர் இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய அணியுடன் இணைவது கேள்விக்குறியதாக மாறி உள்ளது. ஏனெனில் சாஹா மீண்டும் பத்து நாட்கள் தனிமை படுத்துலில் இருந்தாக வேண்டும்.

saha 2

இதற்கிடையே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருக்கும் அனைத்து வீரர்களையும் இந்த மாதம் 19ஆம் தேதியலிருந்து தனிமைப் படுத்திய பிறகே, இங்கிலாந்திற்கு அனுப்பும் முடிவில் இருக்கிறது பிசிசிஐ. எனவே சாஹா குணமாகி மீண்டு வந்தாலும் இந்திய அணியுடன் தனிமைப் படுத்தலில் இணைவது என்பது இயலாத காரியம் என்பதோடு மட்டுமல்லாமல் அதற்குப் பிறகும் அவருக்கென்று தனியாக ஒரு விமானத்தையும் பிசிசிஐ ஏற்பாடு செய்து தராது. எனவே சாஹா இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்றே தெரிகிறது.

இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பன்ட்டுடன் சேர்த்து இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டவர்தான் விருத்திமான் சாஹா. ஒருவேளை அவர் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனால், இந்திய தேர்வுக் குழு மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் கே எல் ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் செய்யும் திறமை இருந்தாலும், அவர் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அந்த பணியை செய்யும் அளவிற்கு முன்னேறவில்லை. எனவே இந்திய தேர்வுக் குழு சாஹாவிற்கு பதில் இன்னொரு முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேர்வு செய்யுமென்றே எதிர்பர்க்கப்படுகிறது.

Advertisement