பிங்க் பந்தா இருந்தா என்ன ? பாக்க தான போறீங்க இவரு பவுலிங்க – சஹா மிரட்டல் பேட்டி

Saha
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி நாளை கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்தும் இந்த போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்து குறித்துமே அதிக அளவு செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன.

Ind

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : எங்களது அணியில் உள்ள வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். மேலும் மூவரும் தற்போது இருக்கும் ஃபார்மில் பிங்க் பந்து என்ன எந்தப் பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

அதிலும் குறிப்பாக முகமது ஷமி எந்த ஆடுகளத்தில் அபாயகரமான ஒருவராக இருப்பார். ஏனெனில் அவரது வேகமும் அவர் பந்தை ஸ்விங் செய்யும் திறமையும் அதற்கு சான்றாக அமையும். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாதமைதானத்திலேயே சிறப்பாக பந்து வீசி வரும் அவர் இதுபோன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான கொல்கத்தா போன்ற நல்ல மைதானத்தில் அவரது பந்து வீச்சு வேற லெவல் இருக்கும் என்று கூறியுள்ளார்.

shami

மேலும் பந்தின் நகரும் தன்மை எப்படி இருக்கும் என்பதை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. போட்டியின் போது அது தெரியவரும். ஆட்டத்துக்கும் பந்தின் நிறத்திற்கும் பந்தின் தன்மைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. எனவே இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது ஷமி நிச்சயம் இந்த போட்டியில் சாதிப்பார்.

Ind 1

வெளிச்சம் மங்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர் கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் இதனை பயன்படுத்தி சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று நினைக்கிறேன். பந்தின் மினுமினுப்பு பார்க்கும்போது ரிவர்ஸ் ஸ்விங் குறைவாக இருக்கும் இருப்பினும் ஷமி இந்த போட்டியில் அசத்துவார் என்று சஹா கூறினார்.

Advertisement