சஹா இந்திய அணியில் இடம்பிடிக்க கங்குலி தான் காரணமா ? – என்னப்பா சொல்றீங்க

- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது.

saha

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றாலும் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பரான சாஹாவிற்கு அணியில் இடம் கிடைத்தது. அவர் இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

- Advertisement -

ஏற்கனவே சஹா காயம் அடைந்ததால் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இரண்டு சதங்களை விளாசினார் பண்ட். ஆனால் அதனை தொடர்ந்து வந்த தொடர்களில் தொடர்ந்து அவர் சரியாக விளையாடாத காரணத்தினால் அவரது வாய்ப்பு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக காயத்தில் இருந்து மீண்ட சகாவிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்படா விட்டாலும் கீப்பிங் எப்போதும் சஹா சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். எனவே அவருக்கு மீண்டும் வாய்ப்பை வழங்கினார் கோலி.

Saha

இந்த தொடரில் சிறப்பாக தனது கீப்பிங் பணியை செய்து வருகிறார் சஹா. மேலும் இந்த தொடரில் அவர் பிடித்த சில கேட்ச்கள் மிக அற்புதமானவை எனவே அவர் விக்கெட் கீப்பிங் திறன் இன்னும் அவரிடம் உள்ளது என்று நாம் அனைவரும் இந்த தொடரில் பார்த்தோம். ஆனால் ரிஷப் பண்ட் நீக்கிவிட்டு சஹாவிற்கு வாய்ப்பு கொடுத்தது கங்குலியின் மூலம்தான் என்று தற்போது ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

அதற்கு காரணம் யாதெனில் தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் கங்குலி தற்போது பிசிசிஐயின் தலைவராக தேர்வாகி உள்ளார். எனவே கங்குலி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாஹாவிற்கு அவரது பவரின் மூலம் மறைமுகமாக வாய்ப்பு பெற்றுத் தந்ததாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது.

saha

ஆனால் இதன் உண்மை காரணம் நாம் அறிந்ததே. ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு தோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஹா செயல்பட்டார். அதனை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி தான் வந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கடந்த ஓராண்டு விளையாட வில்லை என்பதும் நாம் அறிந்ததே.

Saha 1

இதனால் பண்ட் நீக்கத்திற்கு, சஹா இடம்பெற்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது திறமையின் மூலமாகவே இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தார் சஹா என்பது நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஒரு சிலர் இன்னமும் கங்குலியால் தான் சஹா இந்திய அணியில் இடம் பிடித்தார் என்பது போன்ற தவறான செய்திகளை இணையத்தில் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement