2 ஆவது முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்திய வீரர் – எப்படி இரண்டு முறை இது சாத்தியம் ?

Saha-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்று அடைந்த நிலையில் அவர்களுக்கு இந்த தொடருக்கு முன்னர் ஒரு மாத காலம் ஓய்வு இருந்தது. இதன் காரணமாக மூன்று வாரங்கள் வீரர்கள் இங்கிலாந்தில் பாதுகாப்பான இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்று அணி நிர்வாகத்தால் கூறப்பட்டது.

INDvsENG 1

- Advertisement -

அப்படி வெளியே சென்று வந்த வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக ஒரு நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஹாவிற்கு தோற்று உறுதியாகி உள்ளது.

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் தான் இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் குணமடைந்து விளையாடினார். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டது எப்படி சாத்தியம் ? என்று கேள்விகள் எழுந்துள்ளது.

saha

இதுவரை கொரோனா ஏற்பட்டவர்கள் ஒருமுறை குணம் அடைந்த பின்னர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாவது என்பது அரிதான விடயமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் சஹா தற்போது இங்கிலாந்தில் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் இந்திய வீரர்கள் அனைவரும் சமீபத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என்ற தகவல் வெளியான நிலையில் இப்படி ஒரு நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

Saha 2

அது மட்டுமின்றி பல்வேறு வகையிலும் சிந்திக்கவும் வைத்திருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் சஹா ஆகியோருக்கு கொரோனா உறுதியானதால் ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement