அஷ்வினை மட்டும் ஐசிசி தடைசெய்யமாட்றாங்க. அதுக்கு இதுதான் காரணம் இதுதான் – பாக் வீரர் குற்றச்சாட்டு

ajmal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியையும் அதன் வீரர்களையும் எப்போதுமே குறைகூறிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாஹனுடன் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சயீத் அஜ்மலும் இணைந்துள்ளார். தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் இந்திய அணியின் வீரர் ஒருவரின் பந்து வீசும் முறையை பற்றி விமர்ச்சித்துள்ளார் என்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு உதவி செய்யும் வகையில் ஐசிசி நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ashwin 1

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஸ்பின் பௌலராக விளங்கிய சயீத் அஜ்மலை அவருடைய தவறான பந்து வீசும் முறையை காரணம்காட்டி பல முறை சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்கிறது ஐசிசி. தற்போது தனியார் வலைதளம் ஒன்றிற்கு அவரளித்த பேட்டியில் இந்திய அணியின் ஸ்பின் பௌலரான ரவிச்சந்திரன் அஷ்வினும் ஐசிசி விதிமுறையை மீறி பந்து வீசியதாகவும் ஆனால் அதற்காக அவர் தண்டிக்கப்படவில்லை என்றும் கூறி சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.

இதுபற்றி அந்த பேட்டியில் கூறி இருக்கும் அவர், கிரிக்கெட்டுக்கான விதிமுறைகளை யாரையும் கலந்தோசிக்காமல் ஐசிசியே மாற்றிக் கொள்கிறது. நான் எட்டு வருடங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இந்த எட்டு வருடங்களில் ஐசிசியின் விதிமுறைகள் எனக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில் கிரிக்கெட் விளையாடிய அஷ்வினுக்கு எந்த விதிமுறையும் இல்லை. மேலும் சொல்லப்போனால் அவரை ஐசிசி காப்பாற்றியது என்றே கூறலாம். அவருடைய தவறான பந்து வீசும் முறையால் ஏற்பட இருந்த சர்வதேச தடையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் ஆறு மாதங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டார்.

Ashwin

ஐசிசிக்கு பாகிஸ்தான் பௌலர்களின்மேல் தடை விதிப்பது குறித்து எந்த கவலையும் இல்லை. ஆனால் இந்திய வீரர்களை தடை செய்வது குறித்து தான் ஐசிசிக்கு நிறைய கவலை இருக்கிறது. இதற்கெல்லாம் ஐசிசிக்கு, பிசிசிஐ வழங்கும் அதிகப்படியான பணம்தான் காரணம் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Ashwin

கடந்த சில நாட்களுக்கு முன் அஷ்வினை ஆல் டைம் கிரேட் பவுலர் என்று நான் கூற மாட்டேன் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அது வைரலாகவே, அவருடைய கருத்திற்கு தன்னுடைய நக்கலான ஸ்டைலில் பதில் கூறியிருந்தார் அஷ்வின். இந்நிலையில் அஷ்வினின் பந்து வீசும் முறையை விமர்சித்து சயீத் அஜ்மல் கூறிய கருத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement