இந்திய கீழ்வரிசை பேட்ஸ்மென்..! தோனி, கோலி பற்றி சடகோபன் ரமேஷ் பாராட்டு..!

Dhoni
- Advertisement -

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொன்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை(ஆஜெஸ்ட் 1) துவங்க இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற இந்திய அணியின் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

sadagopan

இந்நிலையில் இந்திய அணியின் கீழ்வரை பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்த அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கீழ்வரிசை பந்துவீச்சாளர்களை சிறப்பாக ஆடவைப்பதில் இந்திய அணியின் கேப்டன்களான தோனி மற்றும் கோலிக்கு மிகப்பெரிய பங்குண்டு என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சடகோபன் ரமேஷ் இதுவரை இந்திய அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சடகோபன் ரமேஷ், இந்திய அணியின் கீழ்ஆர்டர் பேட்டிங் குறித்து தெரிவிக்கையில் “இந்திய அணியில் உள்ள கீழ் ஆர்டர் பேட்ஸ்மேன் முக்கியமான ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுகின்றனர். கீழ் ஆர்டரின் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பிற்கு, அவரக்ளுக்கு வாய்ப்பளித்து உற்சாகபடுத்திய இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி கோலி ஆகியோரின் ஊக்குவித்தல் தான் இதற்க்கு முக்கிய காரணமாக உள்ளது.

கீழ் ஆர்டரில் இறங்கும் பந்து வீச்சாளராக இருந்தால் கூட பேட்டிங்கில் களமிறங்கும்போது அவர்கள் 10 அல்லது 15 ரன்கள் எடுத்தாலும் அது அணிக்கு உதவியாக இருக்கும்.அந்த வகையில் அணியின் வேக பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், கீழ் ஆர்டரில் சிறப்பாக விளையாடுகிறார். அவர் ஸ்கோர் 300-350 என்று இருக்கும் போது 400 ரன்களுக்குக் கொண்டு செல்ல புவனேஷ்வர் குமார் போன்ற கீழ்வரிசை பேட்ஸ்மென்களால் முடியும்.” என்று தெரிவித்துளளார்.

sadgopan-ramesh

கடந்த 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது.இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அந்த தொடரில் வேக பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 247 ரன்களை குவித்திருந்தார், 3 அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement