- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டிரைவர் சமையல்காரராக முடியாது கம்பீர்.. ராணாவையும் இசைநாற்காலி தப்பையும் தூக்கி போடுங்க.. ரமேஷ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இதைத் தொடர்ந்து 3வது போட்டி நவம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்தியா தயாராகி வருகிறது.

முன்னதாக 2வது போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 125 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமானது. அதற்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேட்டிங் வரிசையை தாறுமாறாக மாற்றியது முக்கிய காரணமானது. குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடிய சஞ்சு சம்சானை திடீரென 3வது இடத்தில் களமிறக்கிய அவர் ஹர்ஷித் ராணா போன்ற டெயில் எண்டரை சிவம் துபேவுக்கு மேலே களமிறக்கினார்.

- Advertisement -

ராணாவை தூக்கி போடுங்க:

இந்நிலையில் ஒரு நல்ல ஓட்டுநர் சிறந்த சமையல்காரராக மாற முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார். அதே போல ஒரு பவுலரான ஹர்ஷித் ராணாவை 8வது இடத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக வளர்க்க கம்பீர் முயற்சித்து வருகிறார். அது நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கும் ரமேஷ் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை இசை நாற்காலி போல பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்றும் சாடியுள்ளார்.

இது பற்றி யூடியூப் பக்கத்தில் ரமேஷ் பேசியது பின்வருமாறு. “நன்றாக சமைக்கக்கூடிய ஒருவரை ஓட்டுனராக்க முடியாது. ஒரு நல்ல ஓட்டுநர் சமையல்காரராக முடியாது. அதே போல இந்திய அணி நிர்வாகம் ஒவ்வொரு வீரர்களின் பலம் மற்றும் முதன்மை வேலையை உணர்ந்து அவர்களுடைய அதிகபட்ச செயல்பாடுகளை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அந்த வாய்ப்பில் நமது வீரர்கள் எக்ஸ்ட்ரா வேலையை செய்தால் அது நல்லது”

- Advertisement -

இசைநாற்காலியை நிறுத்துங்க:

“ஆனால் அவர்களுடைய 2வது திறன் (ராணாவின் பேட்டிங்) முதல் வேலையாக மாறக்கூடாது. ஒரு பவுலர் முதலில் பந்து வீச்சில் தான் அசத்த வேண்டும். அதே போல ஒரு பேட்ஸ்மேன் முதலில் பேட்டிங்கில் தான் அசத்த வேண்டும் என்பதில் நிர்வாகம் தெளிவாக இருக்க வேண்டும். அங்கே தான் இந்தியா விழுந்து விடுகிறது. இந்தியா தங்களது பேட்டிங் வரிசையில் இசை நாற்காலியை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். 2வது போட்டியில் 160 – 170 ரன்கள் அடித்திருந்தால் இந்தியா வெல்வதற்கு நல்ல வாய்ப்பிருந்தது”

இதையும் படிங்க: 3வது டி20 நடைபெறும் ஆஸியின் கோட்டை ஹோபார்ட் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“முதல் போட்டியில் நாட் அவுட்டாக இருந்த சூரியகுமார் 2வது போட்டியில் 3வது இடத்தில் விளையாடினாரா? இல்லை சாம்சன் 3வது இடத்தில் விளையாடினார். அதற்கு முன் ஓப்பனிங்கில் விளையாடிய சாம்சன் தற்போது 3 – 5 இடங்களில் விளையாடுகிறார். அதனால் அடுத்து யார் விளையாடுவார்? என்ற குழப்பம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. ஆசியக் கோப்பை ஃபைனலில் 4வது இடத்தில் அசத்திய திலக்கை 5இல் தள்ளி விட்டீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -