நீயும் நானும் ஒன்றுதான் வித்தியாசமான முறையில் ரெய்னாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய – சச்சின்

Raina

இந்திய அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகள் 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான இவர் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக டி20 உலகக் கோப்பையை வென்ற 2007 இந்திய அணியிலும், 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இந்திய அணியிலும் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று தனது 33 வது பிறந்தநாளை சுரேஷ் ரெய்னா கொண்டாடினார். அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைத்து தரப்பிலும் இருந்தும் வாழ்த்துக்கள் வந்த நிலையில் இருந்தன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான சச்சின் டெண்டுல்கர் சுரேஷ் ரெய்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அந்த புகைப்படத்தை பதிவிட சச்சின் நமது இருவரது செயல்பாடும் விக்கெட் விழும்போது ஒரே மாதிரி தான் இருக்கும் என்று பதிவிட்டு சுரேஷ் ரெய்னாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டெண்டுல்கரின் இந்த வித்தியாசமான பிறந்தநாள் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.