பாண்டியா மற்றும் பண்ட் ஆகியோருக்கு வித்தியாசமான முறையில் தனது வாழ்த்தினை தெரிவித்த சச்சின்.!

sachin
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 97 ரன்களை குவித்தார். அதன் பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸை 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை பற்றி முன்னாள் வீரரான சச்சின் சில கருத்துகளை கூறினார். அவை, “நல்ல அருமையான கிரிக்கெட். ஸ்டம்ப்க்கு முன்னாலும்,பின்னாலும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹார்டிக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்திய அணிக்கு ன்வெற்றி வாய்ப்பு இந்த போட்டியில் பிரகாசமாக உள்ளது.

- Advertisement -

உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட்டையும் இழக்காத இங்கிலாந்து அணி, துவக்க ஆட்டக்காரர்களை அடுத்தடுத்த பந்துகளில் இழந்ததும். பின்னர் கடந்த இரண்டு போட்டிகளிலும் பிரகாசிக்காத ஹர்டிக் பாண்டியா இந்த இன்னிங்சில் பிரமாதமாக பந்து வீசினார். 6 ஓவர்களை வீசிய அவர் 28 ரன்களை கொடுத்த 5 விக்கெட் வீசி அசத்தினார். இதுவே அவரது சிறந்த பந்து வீச்சாகவும் அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவர் முதல் முறையாக அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ph

ஐந்து விக்கெட்டும் சாதாரணமான விக்கெட் அல்ல. ஜோ ரூட் (16), பேர்ஸ்டோவ் (15), கிறிஸ் வோக்ஸ் (8), அடில் ரஷித் (8), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகிய விக்கெட் ஆகும்.அதேபோல் இந்த டெஸ்டில் அறிமுகமான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அபாரமாக செயல்பட்டார். பறந்தது பறந்தும், டைவ் அடித்தும் கேட்ச் பிடித்தார். அவர் ஐந்து கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் அறிமுக போட்டியிலேயே ஐந்து கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

Advertisement