மீண்டும் ஒப்பனர்ஸாக களமிறங்கும் சச்சின்-சேவாக். இப்படி ஒரு பிரமாண்ட போட்டி அதுவும் மும்பைலயா ? – ரசிகர்கள் மகிழ்ச்சி

Sehwag

ஆஸ்திரேலியாவில் காட்டு தீ பாதிப்பினால் ஏற்பட்ட இழப்பிற்காக நடைபெற்ற புஷ் பயர் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டை தொடர்ந்து தற்போது இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக உலக சீரியஸ் தொடர் நடைபெற உள்ளது.

all stars 1

இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. மொத்தம் பதினோரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக லாராவும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மட்டுமின்றி உலக அளவில் சச்சின், சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், சந்திரபால், லாரா, ஜாண்டி ரோட்ஸ், முரளிதரன், தில்ஷான் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த தொடர் வரும் மார்ச் 7ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

all stars

மொத்தம் பதினொரு டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இறுதிப்போட்டி மார்ச் 22ஆம் தேதி மும்பை பிரபர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் சச்சினின் ஆட்டத்தை மீண்டும் காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பதும் குறிபிடத்தக்கது.

- Advertisement -