புதுசா வந்த பேர் 3 மட்டுமல்ல.. தமிழக வீரருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த சச்சின் – விவரம் இதோ

Sachin
- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் 4வது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அங்கேயே நடைபெற உள்ளது.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ நேற்று தேர்வு செய்து வெளியிட்டது. அந்த அணியில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் திவாதியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நீண்ட எதிர்பார்ப்புக்கு மற்றும் காத்திருப்புக்கு பிறகு அணியில் இணைந்து இருக்கும் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

sky

மேலும் பல ஆண்டுகளாக தான் அணியில் இடம்பெறுவேன் என்று காத்திருந்த அவருக்கு கடைசியாக இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதே போன்று இளம் வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் வருண் கார்த்திக் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 அணி இதோ :

- Advertisement -

அணி வீரர்களின் லிஸ்ட் இதோ :

1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (து.கேப்டன்), 3. கே.எல்.ராகுல், 4. ஷிகார் தவான், 5. ஷ்ரேயாஸ் ஐயர், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஹர்திக் பாண்யா, 8. ரிஷப் பண்ட், 9. இஷான் கிஷான், 10. சாஹல், 11. வருண் சக்ரவர்த்தி, 12. அக்ஸர் பட்டேல், 13. வாஷிங்டன் சுந்தர், 14. ராகுல் திவாட்டியா, 15. நடராஜன், 16. புவனேஷ்வர் குமார், 17. தீபக் சாஹர், 18. நவ்தீப் சைனி, 19. ஷர்துல் தாகூர்.

இந்நிலையில் இந்த தொடருக்கு தேர்வான இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்ட ஒரு டிவீட்டில் முதன் முறையாக அழைப்பை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் ராகுல் திவாதியா ஆகிய மூவருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பை தவறவிட்ட வரும் சக்கரவர்த்திக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு விளையாடுவது எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிக பெருமையான விஷயம் உங்கள் அனைவருக்கும் நிறைய வெற்றிகளை பெற்று சாதிக்க வாழ்த்துக்கள் என சச்சின் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement