தற்போதைய கிரிக்கெட்டில் நான் எதிர்கொள்ள விரும்பும் பவுலர் இவர்தான் – சச்சின் வெளிப்படை

sachin
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரன் மழை பொழிந்தவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு வகை சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் உடைய சாதனைகளுக்கு அளவில்லை. அந்த அளவு ஏகப்பட்ட சாதனைகளை அவர் சர்வதேச அரங்கில் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 34 ஆயிரத்து 347 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி 100 சதங்களை அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சந்திக்காத சிறப்பான பவுலர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு பவுலர்களை எதிர்த்து விளையாடியிருக்கிறார்.

Sachin 1

- Advertisement -

இப்படி தான் விளையாடிய காலகட்டத்தில் 1990 முதல் 2010ஆம் ஆண்டுவரை பேட்டிங்கில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சச்சினிடம் எப்பேர்பட்ட பந்துவீச்சாளர்களை அடிக்கும் திறன் இருந்தது. அவரிடம் தற்போது தற்காலத்தில் நீங்கள் எந்த பந்துவீச்சாளர்களை எதிர் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மேலும் அதற்கு கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இவர்களில் யார் என்று சொல்லுங்கள் என தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு எதிராக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சச்சின் இந்த காலகட்டத்தில் நான் எதிர்த்து விளையாட விரும்பும் பவுலர் என்றால் அது ரசித் கான் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர் : நிறைய பேர் ரசித் கான் உடைய பந்து வீச்சு குறித்து என்னிடம் பேசி உள்ளனர். இதனால் எனக்கும் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரை எதிர் கொள்வது சுவாரசியமாக இருக்கும்.

Rashid

ஏனெனில் தனது பந்துவீச்சில் சில மாறுதல்களை அடிக்கடி செய்யக் கூடியவர் அவர். லெக் ஸ்பின், டாப் ஸ்பின், கூக்ளி ஆகியவற்றை கலந்து வீசி வருகிறார். இவரை எதிர்கொள்வது நிச்சயம் நன்றாக இருக்கும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். மேலும் அப்போதைய கிரிக்கெட்டிலும் இப்போதைய கிரிக்கெட்டிலும் உள்ள விதிமுறைகள் மாற்றம் குறித்தும் அவர் நிறைய விடயங்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக தற்போது உள்ள கிரிக்கெட்டில் இரண்டு பந்துகள் வரை ஒருநாள் போட்டியில் கொடுக்கப்படும் கொடுக்கப்படுவதால் பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி விளையாடுகிறார்கள் எனவும் சச்சின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சினின் இந்த பதிலுக்கு ரசிகர்களும் தங்களது விருப்பங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement