விராட் கோலி இதை மட்டும் செய்தால் நான் அவருடன் சேர்ந்து ஒரு சாம்பியன் பீரை குடிப்பேன் – சச்சின் பேட்டி

Sachin

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி இரண்டாவது போட்டியில் சதமடித்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 42வது சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறினார் கோலி.

Kohli

இந்நிலையில் சச்சின் ஏற்கனவே கூறிய கருத்து ஒன்று தற்போது வைரலாகி வருகிறது அது யாதெனில் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 49 சதம் மற்றும் டெஸ்டில் 1 சதம் என 100 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் வைத்துள்ளார். அந்த சாதனை தற்போது கோலி சத்தமில்லாமல் நெருங்கி கொண்டு இருக்கிறார்.

அந்த சாதனையை விராட் கோலி முறியடிக்கும் பட்சத்தில் நான் விராத் கோலியுடன் இணைந்து ஒரு பாட்டில் சாம்பியன் பியரை மொத்தமாக பகிர்ந்து கொள்வேன் என்று கூறியிருந்தார். அந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தற்போது விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 42 செஞ்சுரி அடித்து உள்ளதால் மீதமுள்ள 8 சதங்களை அடித்து விரைவில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஒருநாள் போட்டியில் விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -