பந்துவீச்சில் இவர்தான் இந்திய அணியை முன்னின்று வழிநடத்தி செல்ல வேண்டும் – சச்சின் வேண்டுகோள்

Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தும், ரஹானே தலைமையில் இந்திய அணி எழுச்சி பெற்று சிறப்பாக விளையாடி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் மூன்றாவது போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Gill

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய அணியை பௌலிங் யூனிட்டில் யார் தலைமை தாங்கி முன்னின்று நடத்திச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் அவர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் பௌலிங் அட்டாக்கை ஜஸ்பிரித் பும்ரா தான் அதிகமான பொறுப்பை ஏற்று வழிநடத்த வேண்டும். ஏனெனில் போட்டியின் நிலைத்தன்மை குறையும்போது தனது சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி அந்த சூழலை கையாளவேண்டும். அவர்தான் பௌலிங் அட்டாக்கு முன்னுதாரணமாக நின்று விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுக்க வேண்டும். ஒரு உண்மையான சாம்பியன் பவுலர் என்றால் அணியின் அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அணிக்கு சாதகமாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றி தர வேண்டும்.

siraj 2

அதனை பும்ரா தான் கையில் எடுக்க வேண்டும் என்று சச்சின் வேண்டுகோள் வைத்துள்ளார். 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது என்றே கூறலாம் .ஏனெனில் அணியில் இருந்த அனைத்து வீரர்களும் அதாவது உமேஷ் யாதவ், சிராஜ், ஜடேஜா, அஸ்வின் மற்றும் பும்ரா என அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிலும் குறிப்பாக அறிமுகமான வீரரான சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

bumrah

பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மேலும் ஸ்பின்னர்கள் ஜடேஜா மற்றும் அஸ்வின் சிறப்பாக வீசி உள்ளனர். அதிலும் குறிப்பாக அஸ்வின் ஸ்மித்துக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதற்காக ஏற்கனவே சச்சினிடமிருந்து பாராட்டை பெற்றார். அதேவேளையில் 2வது டெஸ்ட் போட்டியின் போது ஒரு ஆஸ்திரேலிய வீரரை கூட இந்திய அணி வீரர்கள் அரைசதம் கடக்க விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement